பாசிப்பருப்பு கேக்
தேவையானவை
பாசிப்பருப்பு – கால் கிலோ
தேங்காய் பால் – ஒரு கப்
பால் பவுடர் – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
முந்திரி பருப்பு – 8
நெய் – தேவைக்கேற்ப
சர்க்கரை – 150 கிராம்
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் அதனுடன் தேங்காய் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின் வட்டமான தட்டில் நெய்யை தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்காரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.
பின் அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும். இப்பொது சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்.