சளி தொந்தரவு நீக்கும் தோசை!

Published:

dhosai

இந்த தோசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை உண்பதால் சளி தொல்லை ஏற்படாது. எளிதில் ஜீரணமாகக் கூடியது வாயுத் தொல்லை நீங்கும்

மிளகு-சீரக கார தோசை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/2 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 முடி
மிளகாய் – 4
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 10
உப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, -சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

தோசை ஊற்றும்போது மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும். சுவையான மிளகு-சீரக கார தோசை தயார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img