சப்பாத்திக்கு ஏற்ற இந்த சப்ஜி செஞ்சு பாருங்க!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kaju jabji
kaju jabji

காஜு சப்ஜி

தேவையானவை:
வறுத்த முழு முந்திரி – 50 கிராம்,
பூண்டுப் பல் – 2,
தேங்காய்த் துருவல் -2 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன்,
சோம்பு – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
நெய் – 2 டீஸ்பூன்,
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்),
பட்டை – சிறிய துண்டு,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – சிறிதளவு,
கிராம்பு – 2,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய்த் துருவலுடன் பூண்டு, பொட்டுக்கடலை, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு தாளித்து… வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள், முந்திரி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.