January 19, 2025, 8:34 AM
23.5 C
Chennai

தயிர் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்!

curd

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் லாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது லாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

ALSO READ:  திருவண்ணாமலை: மகா தீப நெய் காணிக்கைக்கு சிறப்புப் பிரிவு தொடக்கம்!

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் வேதி புரதம் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

ALSO READ:  விருதுநகரிலும்... ‘யார் அந்த சார்?’ ஸ்டிக்கர்ஸ்!

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
தயிர் பயன் படுத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

ALSO READ:  இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

தயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும்.

தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம்.

தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. “தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்” என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.