December 6, 2025, 9:22 AM
26.8 C
Chennai

கமல்ஹாசனுக்கு அறிவு புகட்டிய ஜி.கே.வாசன்! தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபையின் கண்டனக் கடிதம்!

kamal
kamal

சத்குரு தியாகப் ப்ரம்மம் குறித்து அவதூறாகப் பேசிய கமல்ஹாசனுக்கு ஜி.கே. வாசனை தலைவராகக் கொண்ட திருவையாறு சத்குரு தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபை தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தியாக பிரம்ம மஹோத்ஸவ சபையின் கடிதம்…

தனது வாழ்நாளில் 96 கோடி முறை ஸ்ரீராமநாமம் சொல்லி சாதனை புரிந்த மகான் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். வால்மீகி முனிவரின் மறுபிறவி என்று போற்றப் படும் ஸ்ரீ தியாக ப்ரம்மத்தை திரு.கமலஹாசன் அவர்கள் திடீரென்று உதாரணமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.

உஞ்சவிருத்தி என்பது ‘பிச்சையல்ல. அது ஒரு பாகவத தர்மம் பக்தி என்பது. கலைஞானி திரு. கமலஹாசன் அவர்களுக்கு இது தெரிய நியாயமில்லை .

கழுத்தில் ஒரு செம்புடன் கீர்த்தனைகளை பாடிவரும் இவர்களுக்கு பொதுமக்கள் தானியங்களை அளிப்பார்கள், செம்பு நிறைந்தவுடன் வீட்டிற்குத் திரும்பி வந்து, அந்த தானியத்தில் உணவு தயாரித்து சுவாமிக்கும் படைத்து, தனது பக்தர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் பகிர்ந்து அளித்து உண்பார்கள்- அடுத்த நாளுக்குத் தேவையென்று கூட அதிகம் சேர்க்க மாட்டார்கள் இப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்

அவர்களை ஒரு பேட்டியின் நடுவே போகிறபோக்கில் *பிச்சை எடுத்தார்’ என்று கூறி பேசியுள்ளார் திரு.கமலஹாசன் அவர்கள்!

சத்குரு சுவாமிகள் ஒன்றும் பொருள் சேர்க்க முடியாதவர் அல்ல – ஸ்ரீ தியாக ப்ரம்மம் மறைந்து 173 வருடங்கள் ஆனாலும், அவரது கீர்த்தனைகள், இசை கலைஞர்கள் உருவாவதற்கும் செய்த செயல்தான் இன்றளவும் அவரை நினைத்து, வணங்கி உலகளவில் உள்ள பல்வேறு இசைதுறையை சார்ந்த பெரிய பெரிய வித்வான்கள்
மற்றும் வித்வாம்ஸினிகள் எல்லோரும், ஒரு மாபெரும் கடமையாக கருதி, வருடா வருடம் அவர்களது சொந்த செலவிலேயே திருவையாற்றில் உள்ள அவரது சமாதிக்கு வருகை தந்து திருவையாறு ஸ்ரீ தியாக ப்ரம்ம மஹோத்ஸவ சபா நடத்தும் ஆராதனை விழாவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அதிகமான சீடர்களைக் கொண்ட ஸ்ரீ தியாக ப்ரம்மம் அவர்கள், கலையைக் கற்றுக் கொடுக்க எந்தவிதமான குருதட்சினையும் பெற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கு இசைக்கலையை கற்று தந்ததோடல்லாமல் உஞ்ச விருத்தி மூலம் வந்த தானியங்கள் கொண்டு உணவும் அளித்தவர் என்றால் மிகையாகாது

தஞ்சை மன்னர் சரபோஜி அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்தபோதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என்று வாழ்ந்தவர்.

thyagaraja samaj 1

அப்பொழுது பாடிய நிதிசால ஸுகமா” எனும் கீர்த்தனையில் – எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் சத்குரு தியாகராசர் உறுதி செய்கிறார்-

“நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு- தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? – அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா?-

அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?” என்று பாடுகிறார்- இந்த கீர்த்தனையிலேயே, பணம் தனக்கு ஸுகம் தராது என்பதை வெகு விளக்கமாக அன்றே கூறிவிட்டார் ஸத்குரு ஸ்ரீ தியாகப்ரம்மம் |இதை திருவையாறு ஸ்ரீ தியாக ப்ரம்ம மஹோத்ஸவ ஸபா |சார்பிலும் இசைக்கலைஞர்கள் சார்பிலும் திரு. கமலஹாசன் அவர்களுக்கு வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறோம் அவர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.

நிர்வாகக்குழு.
ஸ்ரீ தியாக ப்ரம்ம மஹோத்ஸவ ஸபா, திருவையாறு…

என்று அந்தக் கடிதத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories