குட்டீஸ் விரும்பும் கோகுல் பீத்தா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
gokul petha 1

கோகுல் பீத்தா

தேவையானப் பொருட்கள்

மேல் மாவிற்கு:

பச்சரிசி, மைதா மாவு – தலா 1/2 கப்,
நைசாக பொடித்த அவல் – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
ஏலப்பொடி – 2 சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்திற்கு:

இனிப்பு இல்லாத கோவா – 1/2 கப்,
தேங்காய்த்துருவல் – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை,
நெய் – 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி – 1/2 கப்,
பொரிக்க எண்ணெய் (அ)நெய் – தேவைக்கு.

செய்முறை:

மேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பூரணத்திற்கு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்து சுருள வதக்கி, கோவா, ஏலப்பொடி கலந்து இறக்கவும். ஆறியதும் பூரணத்தை தட்டையாகவோ அல்லது உருண்டையாகவோ செய்து, மேல் மாவில் முக்கியெடுத்து, கடாயில் நெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து உருண்டைகளை பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: இனிப்பான கோவா இருந்தால் சர்க்கரை தேவையில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.