
தூதுவளை கூட்டு
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை. – ஒரு கைப்பிடி அளவு
பச்சை பயிறு. -100 கிராம்
தேங்காய் துருவல் -4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -சிறிய துண்டு
உப்பு -தேவையான அளவு
தாளிக்க
கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் _தலா அரை டீஸ்பூன் கருவேப்பிலை பெருங்காயம் எண்ணெய் _சிறிதளவு
செய்முறை

தூதுவளையை ஆய்ந்து முளைகட்டிய பச்சைப் பயறுடன் வேக வைக்கவும்.
தேங்காய்த்துருவல் தோல் நீக்கிய இஞ்சி ,மிளகாய் வற்றல் உடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த தூதுவளை முளைகட்டிய பயிர் கலவையில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும் தாளிக்க எடுத்துக்கொண்ட பொருளை கொண்டு தாளித்து இறக்கவும்.
இது சளி இருமல் ஆகிய தொற்றிலிருந்து நிவாரணத்தை அளிக்கிறது