புதினா மல்லி வடை
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு -முக்கால் கப்
துவரம்பருப்பு. -கால் கப்
கடலைப்பருப்பு. -கால் கப்
புதினா. -அரை கட்டு
மல்லித்தழை. -அரை கட்டு
இஞ்சி. -ஒரு துண்டு
பச்சை மிளகாய். – 3
உப்பு எண்ணெய். -தேவையான அளவு
செய்முறை:
பருப்புகளை ஊறவைத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் .இஞ்சி பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும் .
கொத்தமல்லியையும் புதினா நன்றாக அலசி சிறிது சிறிதாக வெட்டி வைத்து இதனுடன் கலக்கவேண்டும் உப்பும் சேர்த்து இந்த கலவையை நன்றாக கலந்து கொண்டபின் தட்டையாக வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்