
வெள்ளரி விதை – பிஸ்தா லட்டு
தேவையானவை:
வெள்ளரி விதை – 50 கிராம் (சிறிதளவு நெய்யில் வறுக்கவும்),
பிஸ்தா (தோல் நீக்கியது) – 50 கிராம்,
துருவிய வெல்லம் – 100 கிராம்,
ஜாதிக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – 5 டீஸ்பூன்,
லவங்கம் – 5 (பொரிக்கவும்).
செய்முறை:
வறுத்த வெள்ளரி விதை, பிஸ்தா வைத் தனித்தனியாக பொடிக்கவும். பாத்திரத்தில் இதனுடன் நெய் தவிர, மற்ற பொருள் களை நன்கு கலந்து, உருக்கிய நெய்விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.