
பிஸ்தா மில்க்
தேவையானவை:
ஓடு, தோல் நீக்கிய பிஸ்தா – 10,
சர்க்கரை – 2 டீஸ்பூன்,
ஃபுல் கிரீம் பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது),
பிஸ்தா எசன்ஸ் – 2 சொட்டு.
செய்முறை:
சிறிதளவு பாலில் பிஸ்தாவை அரை மணி நேரம் ஊறவிட்டு, சர்க்கரைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ச்சி ஆறவைத்த பால், பிஸ்தா எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதை நுரை வரும்வரை மிக்ஸியில் அடித்து, ஃப்ரீசரில் வைத்து குளிர்ந்தப் பின்பு பரிமாறவும்.