spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஉங்கள் மகளுக்கு பூப்பெய்தும் வயதா? தாய்மார்களே.. இதற்கெல்லாம் தயாராக இருங்கள்!

உங்கள் மகளுக்கு பூப்பெய்தும் வயதா? தாய்மார்களே.. இதற்கெல்லாம் தயாராக இருங்கள்!

pupoo

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றம் நிகழ்வது என்பது பூப்பெய்தும் நிகழ்வு ஆகும். இது முதிர்ந்த பெண்ணாக தன்னை உருமாற்றி கொள்வதற்கான தொடக்கப்புள்ளி.

இப்படி பருவம் அடைந்த பெண்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாவன; புரதசத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு, போலிக் அமிலம் போன்றவை. பருவம் அடைந்த பெண்கள் சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும்.

இதற்காக கெட்ட கொழுப்பு, காபோஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையை பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

pupoo

இதன்காரணமாக உடல் எடை அதிகரித்து, மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு, இடுப்புவலி, ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பருவம் அடைந்த பெண்கள் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

விளையாட்டுத்தனமாக துள்ளித்திரிந்த குழந்தை, பருவம் அடைந்த பிறகு உணவு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் பருவ பெண்கள் சாப்பிட வேண்டிய சில இயற்கை மருத்துவ உணவுகள் பற்றி பாப்போம்.

வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுப்பார்கள். பாலுடன் முட்டை மற்றும் நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து கொடுக்கும் வழக்கமும் கிராமங்களில் உண்டு. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும், நிறைந்தவை.

pupoo

சில ஊர்களிலும், கிராமங்களிலும் வயது வந்த பெண்களுக்கு ஒரு தேக்கரண்டி கீரைவிதையும் பாலும் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கக்கூடியது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லம் கலந்த மாவுருண்டை, தரும் வழக்கமும் கிராமங்களில் உள்ளது.
அரிசியில் இருக்கும் மாவுச்சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச்சத்தைவிட வித்தியாசமானது. இந்த மாவுச்சத்தில் நூறு சதவீதம் ‘அமினோ பெக்டின்’ என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகளை எளிமையாக செரிக்க உதவுகிறது.
அரிசியில் எட்டு சதவீதம் புரதச்சத்து இருக்கிறது. இந்த புரதச்சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது.

கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச்சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும் ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.

pupoo

இளம் பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச்சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்i நல்ல பலனைத் தருகிறது.

வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரிய மனுஷத்தன்மை வந்து உட்கார்ந்துகொள்ளும். உடலின் மீதும் புற அழகின் மீதும் அக்கறை அதிகரிக்கும்.

ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்கிற நினைப்பில் உணவைத் தவிர்ப்பார்கள். குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறான செயல்.

தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்த சோகை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

pupoo

ஹார்மோன்களின் சீரற்ற சுழற்சியால் உடல் எடை கூட ஆரம்பிக்கும். அதனுடன் மாதவிடாய் மாதக்கணக்கில் வராமல் முடங்கிப்போகும்.

இதனை சரிசெய்ய உபயோகிக்கும் ஹார்மோன் மாத்திரைகள் மாதவிலக்கை வரச்செய்வதுடன் கூடவே பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது போன்றவை ஹார்மோன் மருந்துகளின் பக்க விளைவுகளே.

இதனைத் தவிர்க்க சில உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றினாலே போதும். மேலும் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தண்ணீரிலிருந்து காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு.

பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை.

வெள்ளரி விதை, அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புசீராகும்.

pupoo

எள் உருண்டை:
தேவையான பொருட்கள்
கருப்பு எள்
வெல்லம்
ஏலக்காய்
நல்லெண்ணெய்

செய்முறை
முதலில் எள் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி செய்த எள்ளுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து ஒரு சேர நன்கு பிசையவும்.

பிசையும் போது எள்ளில் இருந்து சிறிது எண்ணெய் வெளியேறும். இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது அப்படியே கலவையாகவோ சாப்பிடலாம்.

இந்த எள் உருண்டையை தின்பண்டமாக பெண்கள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பலம் சேர்க்கிறது. எள் உருண்டை இடுப்புக்கு பலம் தரக்கூடியதாகும். இது முறையான உதிரப்போக்கை ஏற்படுத்தி, உடலில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

குறிப்பு
எள் உருண்டையை பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிலக்கு நேரங்களிலும் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

pupoo

கருப்பு உளுந்து களி:
தேவையானவை
கருப்பு உளுந்து
வெல்லம்
ஏலக்காய்
நெய்
ஏலக்காய்

செய்முறை
முதலில் உளுந்தை வறுத்துப் பொடி செய்ய வேண்டும். பின் இந்த உளுந்து மாவுடன், தேவையான அளவு நீர் சேர்த்து கலக்கி, கொதிக்க வைக்கவும். கொதித்து பொங்கி வரும்போது, சிறிதளவு வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

கிளறும் போது இது அல்வா பதத்தில் வரும். அந்த வேளையில் நெய் விட்டு மீண்டும் அதனை கிளற வேண்டும். இப்போது உளுந்தம் களி ரெடி. இது உடலுக்கு நல்ல பலம் தரும். இதனை சிறு பருவம் முதல் பெண்கள் சாப்பிட்டு வரும்போது, உடலுக்கு தேவையான மாவுசத்து மற்றும் புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.

pupoo

இந்த உளுந்தம் களி பூப்பெய்த பெண்களின் சீரான மாதவிடாய் மற்றும் 40 வயதிற்கு மேல் ஆன பெண்களின் உடல் பலத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் பெண்களின் மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாகிறது.

மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தண்ணீரிலிருந்து காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு.

பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை. வெள்ளரி விதை, அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புசீராகும்.

முருங்கைக்கீரை முதுகெலும்பை வலுவாக்கும்.
தினம் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும் மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் இதற்குண்டு.

pupoo

பல இளம் பெண்கள் மன பலம் இல்லாத காரணத்தினால் தான் இந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு குழம்பிப்போய் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மன சிக்கலையும் மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

பூப்பெய்தும் வயதில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் ஊட்டம்தான் அடுத்தடுத்து அவர்கள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம்.
பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல் மன குழப்பங்களைப் போக்குவதுடன் அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் பெற்றோர்கள் பொறுப்பு.

  1. கறுப்பு உளுந்து – தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம்.

அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

pupoo

நல்லெண்ணெய் – ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு முட்டை – பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

கம்பு – வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

pupoo

பொட்டுக் கடலை – பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

அசைவ உணவுகள் – மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் –

மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்துக்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

pupoo

பாகற்காய், சுண்டைக்காய் –

சில பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

சத்து மாவு உருண்டை –

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

pineapple

கொண்டைக் கடலை – கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிலக்கு வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.

சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe