
மென்மையான கோதுமை மாவு கேக்
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு. 1கப்
பேக்கிங் பவுடர். 1/2ஸ்பூன்
பேக்கிங் சோடா. 1/2ஸ்பூன்
உப்பு. 1/4ஸ்பூன்
சர்க்கரை. 3/4கப்
தயிர். 1/2கப்
சமையல் எண்ணெய் 1/4கப்
வெண்ணிலா எசன்ஸ். 1ஸ்பூன்
பால். 1/2கப்
பட்டர் பேப்பர்/greased A4size sheet. 1
நட்ஸ். 1/4கப்
செய்முறை
முதலில் குக்கரில் ஸ்டான்டு வைத்து சிம்மில் வைக்கவும். இதற்கிடையில் கேக் கலவையை தயார் செய்து கொள்ளலாம்.
கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் ஒன்றாக சேர்த்து சலித்து கொள்ளவும்.
பின்னர் சர்க்கரையே மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். பொடித்த பின்னர் சர்க்கரை உடன் சலித்த கோதுமை மாவு கலவை, தயிர், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கலவை கெடியாக இருக்கும். அதனுடன் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்கும். அப்படி இருந்தால் கேக் மென்மையாக இருக்கும்.இப்போது கேக் பாத்திரத்தில் அல்லது வீட்டில் உள்ள டிபன் பாக்ஸில் பட்டர் பேப்பர் போட்டு ஓரங்களில் வெண்ணெய் தடவி கேக் கலவையை ஊற்றி அதன்மேல் நட்ஸ் தூவி முதல் 10நிமிடம் அடுப்பை மீடியமிலும் அடுத்த 15நிமிடம் லோ ப்லேமிலும் வைத்து எடுக்கவும். ஆறியபின் எடுத்து கட் செய்யவும்