நரை முடியா..? இதோ எளிய இயற்கை வழிகள்!

white hair 1 1 - 2026

அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்

தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.

ஒரு கொத்து கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்க வேண்டும். இந்த முறை வாரம் 2 முறை பயனளிக்கும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்

ஒரு இரும்பு வாணலியில் 1 கப் நெல்லிக்காய் பொடியை வறுக்க வேண்டும். அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். இந்த எண்ணெயை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நீங்கள் காண முடியும்.

white hair 2 - 2026

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

நில ஆவாரை இலையுடன் மருதோன்றியிலைக் கூட்டி அரைத்துத்தடவச் செம்பட்டை முடி கருக்கும்.

பூக்காத கொட்டைக் கரந்தைப் பொடியுடன் கரிசலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து 3 கிராம் அளவாகக் காலை, மாலை தேனில் சாப்பிட்டு வர இளநரை மாறும்.

நெல்லிக்காய்ச் சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து இளநரைக்கு தேய்க்கலாம். சீரகம், வெந்தயம், வால் மிளகு இவைகளைச் சமனாக எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வர இளநரை குறையும்.

நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளித்து வர இளநரை போகும். மேலும் கரிசலாங்கண்ணி சாற்றையும், கடுக்காய் ஊறிய நீரையும் ஒன்றாக கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க முடி கருமை பெரும்.

இளநரையை தவிர்க்க மருதாணியுடன் நெல்லிக்காய், தயிர், தேயிலை டிக்காஷன் இவைகளை போதுமான அளவு கலந்து அக்கலவையை முட்டை வெண் கருவில் குழப்பி நரை முடி பகுதியில் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இது முடியில் சாயம் போல் ஒட்டிக்கொண்டு லேசான இளநரை முடிகளை கருமையாக்கிவிடும்.

நெல்லிக்காய் சாற்றையாவது கரிசலாங்கண்ணி சாற்றையாவது, வல்லாரை சாற்றையாவது சமன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து அந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர விரைவில் நரை விழாது.

ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

  • பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
  • இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் என சில நாட்கள் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.
ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின் அந்த வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  • அதன் பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
  • வெங்காயம் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே ஷாம்பு எதையாவது பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

எள்ளு விதைகளை அரைத்து பாதாம் எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

  • பின் அந்த எண்ணெயை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரால் அலச வேண்டும்.

வாரத்திற்கு 2-3 முறை மயிர்கால்களில் வெண்ணெயைத் தடவி ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் நற்பதமான கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் முதல் அந்த எண்ணெயை தினந்தோறும் தலைமுடிக்கு தேய்த்து வாருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories