ஏப்ரல் 18, 2021, 10:20 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  தீப்பட்ட புண், தழும்பு நீங்க.. வீட்டு வைத்தியம்!

  Fire sore 1 - 1

  தீப்புண் சரியாக

  வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தொடர்ந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

  தீப்புண் வடு மாற வேப்பம் கொட்டையை நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி இறக்கி அந்நீரை மத்தை கொண்டு சிலிப்பினால் நுரை உண்டாகும். அந்த நுரையை திப்புண் மீது பூச வடு மறையும்.

  தீப்புண் ஆற வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்மீது பூச புண் ஆறும்.

  குப்பைமேனி இலை சாறு சமஅளவு தேன் கலந்து சேர்த்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும்

  வேப்பம் பட்டையை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி திப்புண் வடுமீது தடவி வர குணமாகும்.

  புளிய மரத்து சொற சொறப்பு பட்டையை பட்டுபோல் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர ஒரு வாரத்தில் புண் ஆறிவிடும்.

  அத்திபால் தடவ தீப்புண் ஆறும்.

  உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவி வர குணமாகும்.

  வேப்பங்கொழுந்தை மோர்விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும்.

  வீட்டில் உள்ள காப்பி டிக்காஷனை தீப்புண் உள்ள இடத்தில் தடவி வர இப்புண் காயம் விரைவில் ஆறும்.

  மருக்கொழுந்து செடியினைப் பறித்து வேரை நீக்கி விட்டு சுத்தம் செய்து நல்லெண்ணெய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண் மீது தடவி வர குணமாகும்.

  உடலில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டால் தேங்காய் எண்ணெய் தீப்புண் மீது தடவி வந்தால் தீப்புண் ஆறும்.

  செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்….

  வேப்பங்கொழுந்து, ஆமணக்கு இலை இரண்டையும் அரைத்து தீப்புண்ணில் வைத்து தினமும் கட்டி வர தீப்புண் ஆறும்.

  30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்..

  குப்பை மேனி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.

  நல்லெண்ணெயில் மருதாணி இலையைகளை துண்டுகளாக வெட்டி போட்டு வதக்கி அரைத்து புண் மீது கட்டி வந்தால் தீப்புண் ஆறும்.

  துளசி சாற்றை தேனில் கலந்து தடவினால் தீப்புண் குறையும்.

  வாழை குருத்தை பிரித்து தீப்பட்ட இடத்தில் கட்ட கொப்பளங்கள் குணமாகும்.

  புளியம் மரத்துப் பட்டையை மென்மையாகப் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர தீப்புண் ஆறும்.

  முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.

  உதிரமர இலையை எடுத்து நன்கு அரைத்து புண்கள் மீது பற்று போட்டு வந்தால் எல்லாவிதமான புண் புரைகளும் குறையும்.

  வெந்தயத்தை பொடி செய்து தீப்பட்ட புண்ணின் மீது தடவினால் தீப்புண் குறையும்.

  உருளைக்கிழங்கை சாறு எடுத்து தீப்புண்களில் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.

  நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து அதை துணியில் வைத்து புண்ணின் மீது கட்டி வந்தால் புண் குறையும்.

  அவுரி இலையை அரைத்து தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்கள் மீது பூச தீப்புண் குறையும்.

  தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்ட தீப்புண் குறையும்.

  கேந்திப்பூ இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தீப்புண்களால் ஏற்பட்ட கொப்புளம் மேல் பூசி வந்தால் கொப்புளங்கள் குறையும்.

  பருப்புக் கீரையை நன்கு அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.

  மாசிக்காய், இதனை தண்ணீர் விட்டு அரைத்து தீப்புண்ணிற்கு தடவிவர தீப்புண் குறையும்.

  மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.

  புளியிலை, வேப்பிலை, இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.

  தேனை பஞ்சால் நனைத்து தீப்புண் பட்ட இடத்தில் தினமும் தடவி வர தீப்புண் ஆறும்.

  ம‌ஞ்ச‌ள்,வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து புண்ணில் தடவ புண் ஆறும்.

  உப்பு, மிளகாய் சம எடை எடுத்துத் தூள் செய்து வேப்ப எண்ணெயில் நன்றாக காய்ச்சி தடவ காயம்பட்ட புண் ஆறும்.

  மருதாணி இலைகளைத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் இலைகளைப் போட்டு சடசடவென வெடித்தவுடன் வாணலியை இறக்கி வைத்து ஆறவிடவும். பிறகு சுத்தமான அம்மியில் வைத்து அரைத்து பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும். தேவையான அளவு துணியில் தடவி புண்ணின் மீது வைத்துக் கட்டி வந்தால் விரைவில் தீப்புண் ஆறும்.

  குங்கிலிய இலையை பிழிந்து சாறு எடுத்து போட தீப்புண் ஆறும்.

  கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும்.

  உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் குறையும்.

  அல்லி இலையை நீர் விட்டுக் காய்ச்சி தீப்புண்களைக் கழுவினால் தீப்புண் குறையும்.

  அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.

  புங்க எண்ணெய்யை லேசாக சூடாக்கி தீய்க்காயங்கள் மீது பூசி வர தீப்புண் குறையும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »