December 6, 2025, 1:42 PM
29 C
Chennai

நகம் கூறும் உங்கள் நலம்!

nail - 2025

உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் அவற்றை நகம் மிகத்தெளிவாக காட்டி விடுகின்றன.
நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.

கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது அழியாது.

எப்போதும் அதிக கோபத்துடனும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் இருப்பவர்களின் விரல்களில் நகம் இருப்பதில்லை. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே உள்ளது.

மன அழுத்தம், கவலை உள்ளவர்களின் விரல்களிலும் நகம் இருப்பதில்லை. அமைதியானவர்களின் விரல் நகங்கள் அளவோடு சீராக்கியதாக இருக்கும்.
அழகியல் உணர்வு உள்ளவர்களின் நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்றும் இருக்கும். இவ்வாறு நகங்கள் மனதையும் வெளிப்படுத்துகின்றன‌.

லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

நகம் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால் மஞ்சள் காமாலையின் அறிகுறி.,

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கு அடையாளம்.,

கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து குறைபாடுகள் இருந்தாலும், நகம் உடைந்தோ, குறுக்கே கோடுகளுடனோ காணப்படும்.

நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் காணப்பட்டால் ‘சோரியாசிஸ்’ எனப்படும் சரும நோய் ஏற்படும்.

நகம் தடித்து கரடு முரடாக காணப்பட்டாலோ பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கும்.

நகங்களின் அடியில் எண்ணெய் விட்டதுபோல காணப்படும். இதற்கு ‘ஆயில்ட்ராப்சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சரும நோயான சோரியாசிஸின் ஆரம்ப அறிகுறியே..

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

விரல் நுனிகள் தடித்தும், வெளிப்புறமாக வளைந்தும் இருத்தல் நுரையீரல் அல்லது இதய நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.

கைகளின் மேலே ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருத்தல் நீரிழிவு முற்றிய நிலையில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் பலவீனமடைந்து இருக்கும். இதனால் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால் கைகளின் மேல் ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

விரல்கள் வீங்கி கொழுகொழுவென்று நீளமாக இருத்தல் ஹைப்போ தைராய்டிசம் (hypothyroidism) இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். மேலும் தைராய்டு சுரப்பில் ஹார்மோன்களானது குறைவாக சுரக்கப்பட்டால், அது மெட்டபாலிசத்தை (Metabolism) குறைத்து, உடல் பருமனை அதிகரித்து, உடலில் நீரை தேக்கி குண்டாக காண்பிக்கும்.

பெண்களுக்கு, ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருத்தல்
ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அர்த்தம்.

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்’ என்று கூறுவதுண்டு

இரசாயன சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கை மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம்.
நகப்பூச்சை தவிர்த்து மருதாணி பயன்படுத்தவும்.
இரத்த சோகை ஏற்படுவதாலும் கூட வெளிரிய மற்றும் மெல்லிய நகங்களை காணலாம். இந்த அறிகுறியோடு சோர்வும் சேர்ந்து வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

கை விரல் நகப்பூச்சின் இரசாயனம் உணவோடு வயிற்றில் சேர்ந்து பல உபாதைகளை ஏற்படுத்தும்.
மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்.

கை மற்றும் கால் விரல்களில் உள்ள நகங்கள் பிங்க் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அவர்களின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

ஆனால் அதுவே நகம் வேறுநிறத்தில் அல்லது வளைந்து இருந்தால், அவர்களுக்கு உடல் நிலையில் எதோவொரு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம்.

நகங்களின் நடுவில் வெண்மையாகவும், விளம்புகள் கருப்பாகவும் தென்பட்டால் அது ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் பிரச்சனையை குறிக்கிறது.

நகங்களின் குறுக்கே பள்ளமான கோடுகள் தென்பட்டால் நமக்கு வயதாகி விட்டது என்று அர்த்தமாம்.

நகங்கள் நீல நிறத்தில் காணப்பட்டால் அது செத்து போச்சு என்று அர்த்தம். அதற்கு போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நீல நிறத்தில் மாறி விடும். இது நமக்கு இருக்கும் நுரையீரல் பிரச்சனை, எம்பிஸிமா போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

நகங்கள் குழிக்குள் புதைந்தது போல தென்பட்டால் சோரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிட்ஸ் (கீழ்வாதம்) போன்ற பிரச்சினைகளை காட்டுகிறது.

அதே மாதிரி நகத்தின் நிறமும் சிவப்பு கலந்த பிரவுன் கலரில் மாறும். குழி விழுந்த நகத்தை மறைக்க நெயில் பில்லிங், ஸ்க்ராப்பிங் போன்ற நெயில் அழகு முறைகளை செய்து கொள்ளலாம்.

நகங்களை சுற்றியுள்ள தோல் சிவந்து வீங்கி் போய் காணப்படும். இந்த அழற்சி லூபஸ் அல்லது இணைப்புத் திசு கோளாறாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

கருப்பு கோடுகள் போன்ற நகங்களினுள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. ஏனெனில் இது மெலனோமா என்ற சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது ஒரு அபாயகரமான புற்றுநோய்களுள் ஒன்று.

சில பேர் எப்போ பார்த்தாலும் நகத்தை கடிப்பார்கள். இப்படி கடிப்பது கூட அனிஸிட்டி (பய உணர்வு, பதட்டம் ) இவற்றின் பாதிப்பு களாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நகங்களை அடிக்கடி கடிப்பது எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். நகங்களை கடிப்பதால் கீழ்க்கண்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது

நகங்களை சுற்றியுள்ள தோலில் இருந்து இரத்த போக்கு மற்றும் சாத்தியமான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது வாயைக் கொண்டு கடிப்பதால் உடல் முழுவதும் பாக்டீரியா, வைரல் தொற்று வர வாய்ப்புள்ளது

பற்கள் எனாமல் சேதமடைதல் ஏற்படும் பற்களின் அமைப்பில் விரிசல் ஏற்படுதல் போன்றவை உண்டாகலாம். எனவே அடிக்கடி நகம் அடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்

சுண்டி விரல் சிறுநீரகம், இதயம் மற்றும் சிறுகுடலுடன் தொடர்புடையது. எனவே உங்க சுண்டு விரல் நகங்களில் பிறை போன்ற வடிவம் தென்பட்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறிப்பதாகும்.

குறிப்பு

நகங்களில் வரை வரையாக செங்குத்தான கோடுகள் தென்பட்டால் உடல் எடை இழப்பு, வயதாகுதல், கால்களில் வீக்கம், அதிகப்படியாக சிறுநீர் கழித்தல், அனிமியா போன்ற இரும்புச் சத்து குறைபாடு இவற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

நகங்களில் கிடைமட்ட கோடுகள் அதிகமாக தென்பட்டால் அது தீவிர நோய்த் தொற்றின் அறிகுறியை குறிக்கிறது. உடம்பு சூடு அதிகமாக இருக்கும் நிமோனியா போன்ற தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பு

சில நேரங்களில் நகங்களில் ஏற்படும் நிறங்கள் பாதிப்பில்லாத ஒன்றாகக் கூட இருக்கலாம். எனவே எல்லாவற்றையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். நகங்களில் ஏற்படும் நிறமாற்றம் உடலில் ஏற்படும் நோயின் முதல் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே உங்களுக்கு சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories