December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

நுங்கு தரும் பயன் தெரியுமா உங்களுக்கு?

palm swallow
palm swallow

சமைக்கப்பட்ட உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு அவற்றின் முழுமையான சத்துகள் கிடைக்கின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தில் “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம் அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”. இந்த நுங்கு சாப்பிட்டு வருவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலைப் பாதிக்காமல் காக்கும்.

நுங்கு சாப்பிடும் போது அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு இருப்போம். நுங்குவின் துவர்ப்பான தோல் பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஆகியன நிரம்பியுள்ளன. அதனால் நுங்குவை அதன் தோலுடன் சேர்த்துச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

கோடைக்காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கும் நுங்கு, இளநீர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹீட் ஸ்ட்ரோகிலிருந்து தப்பிக்கலாம்.

நுங்கு சாப்பிடும் போது அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு இருப்போம். நுங்குவின் துவர்ப்பான தோல் பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஆகியன நிரம்பியுள்ளன. அதனால் நுங்குவை அதன் தோலுடன் சேர்த்துச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்குக் கோடைக்காலத்தில் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதன் மூலம் அம்மை விரைவாகக் குணமாகும். உடலும் வலுப்பெறும்.

கருவுற்ற பெண்களுக்கு குழந்தை வளரத் தொடங்கும் போது பலருக்கும் சாப்பிடும் உணவு செரிமானம் குறைவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படுகிறது.

தகுந்த அளவில் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கருவுற்றிருக்கும் பெண்கள், ஒவ்வாமை பிரச்னை கொண்டவர்கள், வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படும் போதும் குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகின்றன.

இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சுரப்புகளைச் சரி செய்து அடிக்கடி வாந்தி எடுக்கும் பிரச்னையைப் போக்கும்.

நுங்கில் உள்ள `ஆன்தோசயனின்’ எனப்படும் வேதிப் பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே நுங்கினை பெண்கள் அதிகஅளவில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

உடல் சத்து உடல் அதிகம் வெப்பமடையும் வகையில் பணிபுரிபவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபத்தில் நீர்ச்சத்து இழப்பு மற்றும் இன்ன பிற அத்தியாவசிய சத்துகளுக்கும் உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளை மீண்டும் ஈடு செய்யும்.

கல்லீரல் நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. நுங்கு சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும். வயிறு சம்பந்தமான நோய்கள் நுங்கு நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவென்பதால் சிறந்த ஒரு இயற்கை மலமிளக்கி உணவாக இருக்கிது. வயிறு மற்றும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் செய்கிறது. இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்ட ஒரு உணவாக நுங்கு இருக்கிறது. அல்சரால் அவதிப்படுபவர்கள் சீஸன் சமயத்தில் நுங்கினை அதிகளவு சாப்பிடுவதன் மூலம் குடல் புண் சீக்கிரமே ஆறிவிடும். மேலும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளும் நீங்கும்

. உடல் எடை குறைப்பு அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் நுங்கு சிறப்பாக செயல் படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

கண்பார்வை கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதால் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண்பார்வை திறனையும் மேம்மபடுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories