
தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது
பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
மருந்துதயாரிப்பிலும் கூட தூதுவளைக்கீரையின் பூக்களும் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.