
அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும்.
பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

பூவையும் பொரியல் செய்து சாப்பிடலாம்.அகத்தியில் வெள்ளை, சிகப்பு,சாழை என்று மூன்றுவகை உண்டு மூன்றையுமே உண்ணலாம், இவற்றில் சிகப்பு அகத்தியின் பூக்கள்தான் சுவையானது.சுவை மட்டுமல்ல அகத்திபூ மருத்துவ குணம் மிக்கது.
கால்சியம் மிகுந்திருப்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள்,எலும்புகள் உறுதிப்படும். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடம்பில் சேரும் அசுத்தங்களைக் குறைக்கும். சளித்தொல்லை, பித்தம்,அல்சர் பொன்ற இரைப்பை நோய்கள் கட்டுப்படும்.இதயப் படப்டப்பு , பிரஷ்ஷர் மட்டுப்படும்.
சிவப்பு அகத்தி பூக்களை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்டுவந்தால் மலச்சிக்கலே வராது. கண்பார்வை சிறக்கும்
பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்.
பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும்