November 30, 2021, 2:08 am
More

  மனம் மயக்கும் மணம் கொண்ட மகிழம்பூவின் மகத்தான பலன்!

  mahizham poo
  mahizham poo

  மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது.

  நான்கு மகிழம்பூக்களை ஒரு டம்ளர் வெந்நீரி லிட்டு (இரவில்) மூடி வைக்கவும். மறுநாள் காலையில் பூக்களை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் பருகி வரவும். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சிறுநீர் சார்ந்த நோய்கள் விலகும்.

  குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழமரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இயக்கும் நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல்லமை மகிழ மரத்திற்கே உண்டு.

  மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை, மாலை அருந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடிநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது. இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

  மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கிராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.

  மகிழம் பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்

  காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  புத்தம் புதிய மகிழம்பூக்களை ஒரு கைப் பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு கையளவு பாசிப்பயறு, மூன்று வேப்பிலை, சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து உடம்பெல்லாம் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க, வியர்க்குருக்கள் மறையும். மேலும் தொடர்ந்து பயன்படுத்திவர அழுக்குத் தேமல் அடியோடு மறையும்.

  பாலுணர்வுசக்திமேம்பட:
  மகிழம்பூ மனதை மயக்கி புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அறவே களைந்து நேர் மறை எண்ணங்களை அதிகப்படுத்தும். அதனால்தான் தெய்வீகத் திருத்தலங்களில் மகிழமரம் நீங்கா இடம் பெற்றுள்ளது. மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.

  நல்லதூக்கம்உண்டாக:
  நான்கு மகிழம் பூக்கள், ஒரு தேக்கரண்டி தனியா விதை (கொத்த மல்லி) ஆகியவற்றைச் சேர் த்து, கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி இரவில் சாப்பிட்டு வாருங்கள். நிம்மதியான தூக்கம் உண்டாகும்.

  மனபயம்விலக:
  மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சுக்கு, ஏலக்கா ய் வகைக்கு 10 கிராம் சேர்த்து அனைத்தையும் ஒன்றுகலந்து தூள்செய்யுங்கள்.

  இதில் காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மன பயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிட்டுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.

  மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும்.

  கற்றாழைநாற்றம்விலக:
  மகிழம்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கிச்சிலிக்கிழங்கு, வெந்தயம், பாசிப்பயறு, வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் , சந்தனம், சிவப்புச் சந்தனம் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி, அனைத்தையும் ஒன்றாக்கித்தூள் செய்து கொள்ளவும். இதனை உடம்பெல்லாம் பூசி குளித்து வர, உடலில் காணும் கற்றாழை நாற்றம் முற்றிலும் விலகிவிடும்.

  தலைமுடிவளர:
  மகிழம்பூ, மருதாணிப்பூ, ஆலந்தளிர், அரச இலைத்தளிர் ஆகியவற்றை வகைக்கு ஒரு கையளவு எடுத்து விழுதாய் அரைத்து, தலை முழுவதும் மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து, அரைமணி நேரம் ஊற வைத்துக்குளித்து வரவும். தொடர்ந்து 21 நாட்கள் இம்முறை யைப் பின்பற்றினால் பலன் நிச்சயம். முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற குறைபாடுகள் நீங்கி, முடி அடர்த்தியாய்- கருமையாய்- தாராளமாய் வளரும்.

  வெள்ளைப்படுதல்குணமாக:
  மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிரா ம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை – மாலை இரு வேளையும் அரை தேக் கர ண்டியளவு சாப்பிட, ஏழு தினங்களில் வெள்ளைப் படுதல் குணமாகும். ஆண்- பெண் மர்ம உறுப்புக ளில் உண்டாகும் புண் குணமாகும்.

  படை,அரிப்பு தீர…
  மகிழம்பூ 1/2 கிலோ, கருஞ்சீரகம் 100 கிராம்- இரண்டையும் சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதனை அரை தேக்கரண்டி அளவுக்கு உள் ளுக்குச்சாப்பிட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் வெளிப்பூச்சும் செய்து வர படை, அரிப்பு தீரும். தொடை இடுக்குகளில் உண்டாகும் படை, அரிப்பு போன்ற தோல் வியாதிகளை முழுமையாகக் குணப்படுத்தும்.

  தலைவலிகுணமாக…
  மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, தனியா, ரோஜா ப்பூ, ஏலக்காய், அதி மதுரம், சித்தரத்தை ஆகிய வற்றை வகைக்கு 25 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இரு வேளை யும் அரை தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட, தலைவலி, நாள் பட்ட தலைவலி, தலை பாரம், ஒற்றைத் தலைவலி போன்ற குறைபாடுகள் தீரும்.

  நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிவிடவும். பின்னர் இத் தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறுக்கேற்றி பாலுணர்வு சக்தியை இரு பாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம் முறையை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும்

  வெட்டைநோய் தீர:
  பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகத்தை விரட்டுவதில் மகிழம்பூ மிக முக்கிய பங்காற்றுகிறது. வெட்டைச் சூட்டினால் பாதிக்கப்பட்ட தேகம் மெலிந்து- கருத்து- களையிழந்து காணப்படும்.

  முகப்பொலிவிழந்து 20 வயதுடையோர் 60 வயதைப்போல் காட்சியளிப்பர். அவர்களை மீட்டெடுத்து புத்துணர்ச்சி உண்டாக்கும் மகிழம் பூக்களை தலை வணங்கி, அதன் பாதம் பணிவதில் தவறில்லை.

  மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்

  10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

  மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.

  மகிழ மலர்களில் இருந்து, வாசனை எண்ணை மற்றும், வாசனைப்பொடி தயார் செய்யப்படுகின்றன. மகிழ எண்ணையுடன் சந்தன எண்ணையைக் கலந்து, உயர் மதிப்பு மிக்க, வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். இவை மலர் மருத்துவத்தில், மன நல பாதிப்புகளை சரி செய்யும் அற்புத மருந்துகளாக பயன்படுகின்றன.

  மகிழ மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணை,‌ நறுமணமிக்க ஊதுவத்திகளில், சாம்பிராணி போன்ற வாசனைப் பொடிகளில் சேர்க்கப்படுகின்றன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-