December 5, 2025, 8:53 PM
26.7 C
Chennai

நோயை முடக்கும் மூக்கிரட்டை!

mukuttan kirai
mukuttan kirai

அதிக மக்களுக்கு தெரியாத மக்கள்
பயன்படுத்தப்படாத ஒரு வகையான கீரைதான் இந்த “மூக்கிரட்டை”

இந்த மூக்கிரட்டை கீரை (mookirattai keerai) நம் வீட்டை சுற்றியும், தரையில் சாலையோரங்களிலும் படர்ந்திருக்கும்.

இந்த மூக்கிரட்டை கீரையில் பல
ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த மூக்கிரட்டை கீரை மூலம் பல நோய்களை குணப்படுத்திவிடலாம்.

அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.

மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.

மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.

மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.

மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.

மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.

மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும்.
மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் இட்டு ஆற வைத்து பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.

மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.

உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.

மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான்,நெருஞ்சில்,
மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.

மாதத்தில் ஒருமுறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை காயவைத்து அவற்றை பொடிசெய்து நீரில் வேகவைத்து பருகிவந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

மலட்டுத்தன்மை என்பது வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உடல் நலம் நன்றாக இருந்து சில காரணங்களினால் குழந்தை
பெற்றுக்கொள்ள முடியாத என்று நிலைமையே மலட்டுத்தன்மை
கூறப்படுகிறது.

இந்த மலட்டுத்தன்மை நீங்க மூக்கிரட்டை
கீரையை வாரத்தில் ஒருமுறையாது உணவில் சேர்த்து வர ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்கும்.

பல்வேறு காரணங்களினால் இப்பொழுது
பலருக்கு கண் பார்வையில் தெளிவின்மை, கிட்டப்பார்வை, எட்டப்பார்வை மற்றும் சில
குறைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு மூக்கிரட்டை செடியின் வேரினை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.

இவற்றை இளம் சூடான நீரில்கலந்து
பருகிவந்தால் அனைத்து கண்கள்‌ சம்மந்தமான பிரச்சனைகளும் குணமாகும்
கண்கள் மிக தெளிவாக தெரியும்.

எவ்வளவு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் அளவுக்கு வரும் வரை பருகிவர, சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. நிவாரணம் அளிக்கின்றது.

உடலுக்கு இதயத்தின் நலம் முக்கியமோ, அதே போல் சிறுநீரகத்தின் நலனும் முக்கியம். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் நறுக்கி, ஒரு

பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் அளவுக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி வாரம் இரண்டு முறை பருகிவர, சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது.
மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது, சிறுநீரக தொற்றுநோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

விளக்கெண்ணெய்யில் இதன் வேர்களைச் சேர்த்துக் காய்ச்சி அரைத் தேக்கரண்டி அளவு சாப்பிட, மிதமான கழிச்சலை உண்டாக்கி, வாத நோய்களைத் தடுக்கும். முழுத் தாவரத்தையும் நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலப் பருகலாம். காய் வகைகளைக் கொண்டு சூப் தயாரிக்கும்போது, இதன் இலைகளையும் அதில் சேர்க்கலாம். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வன்மையுடைய கீரை என்பதால், வேனிற் காலங்களில் அதிகமாகப் பயன்படுத்தலாம்.

இதன் வேரோடு மிளகு சேர்த்து, விளக்கெண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி அரைத் தேக்கரண்டி அளவு பருக, மூலம் மற்றும் தோல் நோய்கள் குணமாகும். தண்ணீரில் மூக்கிரட்டை, சீரகம், சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்துப் பருக, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி மறையும்.

ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவை மூக்கிரட்டை குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மூக்கிரட்டைக் குடிநீர் சார்ந்து நடைபெற்ற ஆய்வில், பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்புகளை மூக்கிரட்டை தடுப்பது (Hepato-protective) தெரியவருகிறது. இதிலிருக்கும் ‘போயரவினோன் – இ’ (Boeravinone-E) எனும் வேதிப்பொருளுக்கு, உடலில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை இளக்கும் (Spasmolyitic) தன்மை காரணமாக, வலிநிவாரணி செய்கையும், இதயத் தசைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. மூச்சுக்குழலை விரிவாக்கும் செய்கையிருப்பதால், ஆஸ்துமா நோய்க்கான மருந்தாகவும் மூக்கிரட்டை பயன்படுகிறது.

மூக்கிரட்டைக் கீரையுடன் பாசிப்பருப்பு, தக்காளி, உப்பு, பெருங்காயம், சிறிது மிளகு சேர்த்து கூட்டுபோலச் செய்து, சாதத்தில் பிசைந்து சாப்பிட உடலுக்கு வலுவைக் கொடுக்கும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மூக்கிரட்டையை உணவு முறைக்குள் சேர்த்துக்கொண்டால், உடலில் மையமிட்டிருக்கும் வாத நோய்கள் எல்லாம் ‘பெட்டிக்குள் பாம்பு போல’ அடங்கிவிடும் என்று உவமை பேசுகிறது ‘தேரன் வெண்பா’. முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய வாத நோய்களைத் தடுப்பதற்கான அற்புத மூலிகை மூக்கிரட்டை. கப நோய்கள், உடலில் தோன்றும் அரிப்பை நீக்குவதுடன், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.

மலமிளக்கி செய்கையைக் கொண்டு இருப்பதால், அவ்வப்போது சாப்பிட்டால் மலத்தை இளகலாக வைத்துக்கொள்ளும். சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறுநீர்ப்பெருக்கி செய்கையுடைய இதன் வேரைக் குடிநீரிட்டுப் பருகலாம். வீக்கங்களைக் குறைக்கும் தன்மையும் மூக்கிரட்டைக்கு உண்டு. மூக்கிரட்டையோடு முடக்கறுத்தான் கீரை சேர்த்துச் செய்யப்படும் அடையை, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் சாப்பிட்டுவர, வலியின் தீவிரம் குறையும். மூக்கடைப்போடு மூச்சுவிடச் சிரமப்படுபவர்கள், மூக்கிரட்டையைக் குழம்பு வகைகளில் சேர்த்து வரலாம்.

நமது உடலில் இருக்கும் முக்கியமான ஒரு உள்ளுறுப்பான ஈரல் பல்வேறு விதமான நச்சுக்கள் நமது உடலில் நுழைந்து தீங்கு ஏற்படுத்துவதை தடுக்கிறது. மூக்கிரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ஈரல் நன்கு பலம் பெறும். ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குவதிலிருந்தது நம்மை பாதுகாக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories