கனவின் விளைவு: நீர் கண்டால் நிலைமை!

Published:

dream-1
dream-1

உங்கள் கனவில் வெள்ளம் வந்தால் ஏதோ தீமை நடக்கப்போகிறது என்ற அறிகுறியாகும்.

கனவில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடுவது போன்று வந்தால் வாழ்க்கையில் பதற்றம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்ற அறிகுறியாகும்.

வெள்ளம் குறைந்து ஓடுவது போன்று கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றம் மற்றும் சிந்தனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

தண்ணீரானது மிதமான வேக நிலையில்
பாய்ந்து வருவது போன்று கனவில் வந்தால் தீராமல் இருந்த வாழ்க்கை பிரச்சனை தீர்ந்துவிடும்.

கனவில் தண்ணீர் வேகமாக நிரம்பி வழிவது போன்று கண்டால் மனதில் உள்ளவற்றை அடுத்தவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற அறிகுறியாகும்.

courtallam main falls
courtallam main falls

நீரானது அனைத்து வடிவங்களையும் எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. நம் கனவில் தண்ணீர் பற்றிய கனவானது நம் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும், மறுபுறம் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.

நீர் உயர்வது போன்று கனவில் கண்டால்
உங்களுடைய வாழ்க்கையில் இப்போது நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களை குறிப்பதாகும்.

வீட்டிற்குள் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுவது போன்று கனவில் கண்டால் பெருமளவில் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படுவதன் அர்த்தமாகும்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இந்த கனவானது உங்களுடைய வீட்டை பற்றியோ, குழந்தை பருவம் பற்றியோ அல்லது மறந்து போன உணர்ச்சியின் அடையாளமாக கூட இருக்கலாம் என்று இந்த கனவின் மூலம் நமக்கு உணர்த்துகிறது.

well
well

நீங்கள் காணும் கனவில் கடல் மற்றும் கடல் அலைகள் வந்தால் நம்முடைய ஆழமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.

பெரிய அலைகள் இருக்கும் கடல் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குள் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்தால் வாழ்க்கையில் ஏற்பட போகும் அச்சத்தினை குறிக்கின்றது.

கனவில் சுனாமி அளவிற்கு பேரலை வந்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டம் ஏற்படக்கூடிய செய்தி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.

ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.

vaigai river
vaigai river

குளம் கனவில் வந்தால் கனவில் வறண்ட குளம் இருப்பது போன்று வந்தால் செலவுகள் அதிகமாக வரப்போகிறது என்று அர்த்தம்.

மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வருவதற்கு தாமதம் ஆகும்.

அதிகமாக தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பெரியவர்களிடம் இருந்து நல்ஆதரவும், நிறைய பலனும் கிடைக்கும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

பல நாட்களாக தீராமல் இருந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குளத்தில் தாமரை மலர் இருப்பது போல் கனவு கண்டால் கடன் சுமை தீர்ந்து அதிக பணவரவு வருவதற்கு வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் ஒற்றுமையும், வியாபாரத்தில் நல்ல விருத்தியும் இருக்கும்.

குளத்தில் நமது கால் பகுதிகளை கழுவுவது போல் கனவு கண்டால் புதிய உற்சாகம் ஏற்படும்.

pool
pool

மேலும் ஒளிமயமான
எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றியினை யாராலும் பெற இயலாது.

தண்ணீரில் தத்தளிப்பது கனவு கண்டால்
புதியதாக அறிமுகம் ஆனவர்களால் சிரமம் ஏற்படும்.

மேலும் நெருங்கிய உறவினர்களால்
கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். திடீர் தனலாபம் உண்டாகும்.

நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

நம்முடைய ஆழ்ந்த கனவில் அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் வந்தால் எதிர்ப்பாராத அளவிற்கு திடீர் பணவரவு அதிகரிக்கும்.

செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

sea
sea

மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய செய்தி வரும். மேலும் மதிப்பும், மரியாதையும் உயர்ந்து தலை நிமிர்ந்து நடப்பீர்கள்..

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கனவில் தண்ணீரில் வீடு இருப்பது போல் வந்தால் செல்வ செழிப்பு உங்களை தேடி வரும்.

உறவினர்களால் தேவையில்லாமல் மனகஷ்டமும், வீண் அலைச்சலும் ஏற்படும்.

உங்களுடைய நண்பர்களால் நன்மை தரக்கூடிய விஷயமும், பணவரவும் இருக்கும்.

கனவில் தண்ணீரில்‌ மூழ்குவது போல் கண்டால் தங்களுடைய குழந்தை செல்வங்களால் சந்தோஷம் கிடைக்கும்.

எப்போதோ செய்த நன்மைக்கு பலன் இப்போது கிடைக்கும்.

நம் கனவில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் கஷ்டத்தில் இருக்க கூடிய உங்களுக்கு தானாகவே தேடிவந்து உதவியினை செய்வார்கள். இதனால் மன கஷ்டம் நீங்கி மகழ்ச்சி அடைவீர்கள்.

புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தோல்விகள் அனைத்தும் விலகி வெற்றிகள் மட்டுமே அடைவீர்கள்.

Related articles

Recent articles

spot_img