
கௌதாரி கனவில் கண்டால் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.
ஒரே ஒரு ஆந்தையை கனவில் காண்பது நல்லதல்ல. ஆந்தை கூட்டத்தை பார்த்தால் நல்லது.
பருந்து அல்லது கழுகை கனவில் காண்பது நல்லதல்ல.
கழுகை கனவில் கண்டால் யாரோ உங்களை கவிழ்த்து விட சதி செய்கிறார்கள் என்று பொருள்.
கழுகு பிணத்தை கொத்தி தின்பது போல கனவு வந்தால் நமக்கு வியாதிகள் வந்து அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அர்த்தம்.
வௌவால்களை தனியாகவோ, கூட்டமாகவோ கனவில் காண்பது நல்லது.
வௌவால் வீட்டிற்குள் வருவது போல கனவு வந்தால் கெட்ட செய்தி வரும் என்று அர்த்தம்.
வௌவால் வீட்டிலிருந்து வெளியே செல்வது போல கனவு வந்தால் நம்முடைய வறுமை நீங்கும் என்று பொருள்.