அம்மை போட்டு ஜூரமா..
துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சம அளவில் சேர்த்து நீர் விட்டு மை போல் அரைத்து உடம்பின் மேல் தடவினால் ஜுரம் நீங்கி அம்மை மறையும்.
கத்தரி விதைகளுக்கு அம்மைக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு.
அம்மை வடுக்கள் மறைய…
நாள்தோறும் ஆவிவ் எண்ணெயைத் தழும்புகள் மேல் தடவிவர தழும்புகள் மறையும்.
அரணைக் கடிக்கு…
அரணை கடித்து விட்டால் உடனே சிறிது பனைவெல்லம் சாப்பிடலாம். அல்லது வசம்பு சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சுட்டுப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அரணைக் கடி நஞ்சு முறிந்து விடும்.
அரணைக்கடித்தால்.. சாரணைச் செடியின் வேர் 20 கிராம் அளவு எடுத்து துளசிச்சாறு விட்டரைத்து பசும்பாலில் கலந்து பருக வேண்டும். சாரணை வேர், துளசி சாறு விட்டரைத்து கடிவாயில் பற்றும் போட குணமாகும்.
அடிக்கடி காற்று பிரிகிறதா?
காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு இவற்றை சம எடை எடுத்து நெய் விட்டு தனித் தனியே வறுத்து, இடித்துப் பொடி செய்து, அரை தேக்கரண்டியளவு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்.
அண்ட வாதமா?
200 கிராம் இஞ்சியை மேல் தோலை சீவி வில்லைகளாய் நறுக்கி குப்பை மேனிச் சாறுவிட்டு விரவி, 30 கிராம் வெள்ளெருக்கம் பூ சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்து இரவில் பனியில் வைத்தெடுத்து காலையிலும் மாலையிலும் 9 நாள்கள் சாப்பிட்டு வர அண்டவாதம் அறவே போகும்.
ஆஸ்துமா தொந்தரவு குறைய…
தூதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் படுக்கப் போகும் முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனே வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனை மூக்கருகே வைத்து உறிஞ்ச கவாசம் சற்று சமன்படும்
அடிக்கடி சுண்டைக்காய் வற்றலை சமைத்துச் சாப்பிட்டு வர வறட்சி இருமல், சுரம், வயிற்றில் பூச்சிகள். ஆஸ்துமா அனைத்தும் குணமாகும்.
பத்து அவுன்ஸ் செங்கரும்புச் சாறுடன் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளை ஏழு நாள்கள் அருந்தினால் ஆஸ்துமா தொல்லை குறையும்.
நாலு வில்வ இலைகளுடன், நாலு துளசியையும் சேர்த்துக் கசக்கி அத்தடன் நாலு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட ஆஸ்துமா உபத்திரவம் குறையும்.