நாய்க் கடிக்கு…
முருங்கைக் கீரை சாறு அரைக்கிண்ணம் எடுத்து அரைக்கிண்ணம் நல்லெண்ணெய் கலந்து வாயில் ஊற்றி ஒரே மூச்சில் விழுங்க நாய்க்கடி விஷம் உங்களை ஒன்றும் செய்யாது.
நீர் வாதம் சரியாக…
கை, கால் மூட்டுகளில் நீர் இறங்கி வீக்கம் கண்டால் களி மண்ணில் நீர் விட்டுக் குழைத்து பூச நீர் வாதம் நீங்கும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாகற்காய் சூப் வைத்து சாப்பிட நாளடைவில் சர்க்கரை வியாதி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
அத்திப்பழத்தின் விதைகளைத் தனியே எடுத்து உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஆறு கிரெய்ன் வீதம் எடுத்துத் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரிலுள்ள சர்க்கரை படிப்படியாகக் குறைந்து விடும்.
அச்சி மரத்தின் பாவைக் கொண்டு வந்து அதில் சிறிது வெண்ணெயையும் கலந்து குழப்பிச் சாப்பிடவும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இது ஓர் அருமையான மருந்து.
நாவல் கொட்டையைச் சேகரித்து நன்றாய்க் காய வைத்துத் தூளாக இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரை குறையும்.
கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர அதிலுள்ள இரும்புச் சத்து ஈரல் நோய்களையும் நீரிழிவு நோயையும் குணப்படுத்துகிறது.
சிறு குறிஞ்சான் இலையை நிழலில் காய வைத்து இடித்து சலித்து வைத்துக் கொண்டு நெய்யில் குழைத்துச் சாப்பிட சிறுநீரில் உள்ள சர்க்கரை குறையும்.
நிமோனியா குணமாக…
திப்பிலி, சுக்கு, மிளகு. அதிமதுரப்பால் இவற்றைத் தூள் செய்து தனித் தனித் தூளில் அரைகிராம் எடை எடுத்து 12 அவுன்ஸ் நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி நாலு மணிக்கு ஒரு தரம் வேளைக்கு ஓர் அவுன்ஸ் கொடுத்து வர நிமோனியா எனப்படும் கபவாத ஜூரம் குணமாகும்.
நெறி கட்டிக்கொண்டு சுரமா?
மிளகைச் செடியிலிருந்து ஒரு பிடி இலையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒரு முடக்கு குடித்து வர நெறி கட்டிகள் கரைந்து குணமாகும்.