
மூக்கடைப்புக்கு…
சில துளிகள் கடுகு எண்ணெயை மூக்கின் மேல் தேய்த்தால் மூக்கடைப்பு விலகும்.
சளிப்பிடித்துக் கொண்டு மூக்கடைப்பு இருந்தால் ஒரு மஞ்சள் துண்டை ஓர் ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி அதன் புகையை உள்ளுக்கு இழுக்க சளி குறையும். மூக்கடைப்பு நீங்கும்.
மூத்திர அடைப்பா?
50 கிராம் வெங்காயத்தை சட்டியிலிட்டு சூடாக்க அது பொரிந்து புஷ்பமாகும். அதை 5 கிராம் அளவு இளநீரில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க 10 நிமிடத்தில் நீரிறங்கும்.
முள்ளங்கியை இடித்துச் சாறு பிழிந்து காலையில் ஒரு சங்களவு உள்ளுக்குக் சாப்பிட்டு வர நீர்த்தாரை, நீர்ப்பை ஆகியவற்றில் உள்ள குற்றங்களை நீக்கும்.
மூட்டு வீக்கமா?
வேலிப்பருத்தி இலைச்சாறு அரை விட்டர் எடுத்து அதில் ஒரு ரூபாய் எடை புதுச்சுண்ணாம்பு நீறு போட்டு நன்றாய்க் கரைத்து ஒரு மணி நேரம் வெயிலில் வைத்தெடுத்து வீக்கம், வலியுள்ள மூட்டுகளில் தடவி நன்றாகத் தேய்த்து விட ஒரு மணி நேரத்தில் குணம் தெரியும்.
தேவையான அளவு சுக்கையும் சம அளவு பெருங்காயமும் எடுத்து பால் விட்டு அரைத்து வலியும் வீக்கமும் கண்ட மூட்டுகளில் தடவி வர குணமடையும்.
மூலக் கடுப்பு குணமாக…
மாதுளம் பூச்சாற்றில் அதிமதுரத்தை அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து சாப்பிட சில நாள்களில் குணம் தெரியும்.
மெலிந்த தேகம் தேற…
பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. பேரீச்சம் பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால் மெலிந்த உடல் தேறும் போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
இலந்தை இலையை சுத்தம் செய்து நன்றாக அரைத்து வெந்நீரில் கரைத்துக் குடித்து வர நாலைந்து வாரங்களில் ஊளைச்சதை குறையும்.
ஆமணக்குச் செடி. வேரை நன்கு இடித்து தேனைக் கூட்டிப் பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறு நாள் காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் நான்கு வாரம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.