
சென்னையில் செயல்படும் தமிழக அரசு தேசிய மாணவர் படையில் இருந்து காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் Office Assistant, Chowkidar, Store Attendant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் ஆறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கமான வயது தளர்வுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Office Assistant மற்றும் Store Attendant பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Chowkidar – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ex-servicemen ஆக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ.50,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நேர்கணல் அல்லது சான்றிதழ் சரிபாரப்பு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.201 அன்றுக்குள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.. மேலும் பணி தொடர்பான வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்..
For more Info: https://drive.google.com/file/d/1Z_-0VHAzOk7iCj0Oj7gViXDW5eDyd0av/view