health tips - 2026

அப்பாச்சி தீர்வு: உணவு ஜீரணம், கண், கக்குவான்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

உணவு ஜீரணமாகவில்லையா?

சம்பங்கிப்பூவை குடிநீர் தயாரித்து காலை, மாலை சாப்பிட்டு வர அஜீரணத் தொல்லை நீங்கும்.

கண்களில் சதைப்படலம் வராமலிருக்க…

களாப் பூக்களை முதல் நாளே கொண்டு வந்து வாடாமல் இருக்க ஈரத் துணியில் சுற்றி வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை சூரியன் உதிப் பதற்கு முன்னரே இப்பூக்களை நசுக்கி கண்களில் இரண்டு சொட்டுக்கள் விடவும். இதனால் கண்களில் சதைப்படலம் ஏற்படாது. கண்களில் பூ விழுதலைக்கூட இது எளிதில் போக்க வல்லது.

கஸ்தூரி

கஸ்தூரி மங்கலான கருமை நிறைந்த சிவப்பாக சிறு சிறு மணிகளாக இருக்கும். இதற்கு வெப்பமாக்கும் தன்மை உண்டு. நறுமணம் தருவதோடு நல்வ மருத்துவ சக்தியும் உண்டு. வலியை நீக்கும். சிறுநீர் பெருக்கம் உண்டு. காரமும் கசப்புச் சுவையும் உடைய கஸ்தூரி வீரிய சக்தியும் தாது புஷ்டியும் ஏற்படுத்தும். நல்ல கஸ்தூரி தானா என்று அறிவது எப்படி? நல்ல வெங்காயத்தை நறுக்கி அதே கையால் கஸ்தூரியை எடுத்தால் கஸ்தூரி மணம் இருக்க வேண்டும். வெங்காய நாற்றம் இருக்கக்கூடாது.

அதிமதுரத்தில் மருத்துவம்

வெள்ளைக் குன்றிமணி செடியின் வேர்ப்பகுதியே அதிமதுரம்! அதிமதுரப் பொடியை வெண்ணெய், நெய், தேன் முதலியவற்றுடன் கலந்து வெட்டுக் காயத்துக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். அதிமதுரப் பொடியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தினால் நாள்பட்ட இருமல் குணமாகும். இதனை சீயக்காயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

கக்குவானுக்கு…

முதன் முதலாக சினையாக உள்ள பசுமாட்டின் கோமயம் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் நான்கு நாள்கள் தொடர்ந்து கொடுத்து வர நல்ல பலன் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.