அதிர்ச்சி ! முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டு தற்கொலை !

இந்தியா பொது தகவல்கள் விளையாட்டு

chandrasekar vp 1 - 2026இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர்  இவருக்கு வயது 57. இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1987ல் ரஞ்சிக்கோப்பையை வென்ற தமிழக அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள சந்திரசேகர் தனது ஆக்ரோஷமான ‘பேட்டிங்’கிற்கு பெயர் பெற்றவர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் தற்போது நடக்கும் டி.என்.பி.எல்,. கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வி.பி., காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். தவிர, வேலச்சேரியில் வி.பி. நெஸ்ட் என்ற கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்.chandrasekar. vp - 2026இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள தனது வீட்டில் உள்ள பெட்ரூமில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை அதிகாரி செந்தில் முருகன் கூறுகையில், ‘சந்திரசேகரின் மனைவி, அவரின் ரூமை தட்டியுள்ளார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. அதன்பின் ரூமின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணை செய்த போது, அவருக்கு ஏற்பட்ட சில நஷ்டத்தால் விரத்தியில் அவர் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. அவர் உயிரிழக்கும் முன் தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.’என்றார்.

இச்சம்பவம் கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவிக்கன்றனர்.

கிரிக்கெட் வீரர் அருண்கார்த்திக் சந்திரசேகர் பற்றி கூறுகையில் அவர் சிறந்த மனிதர் என்றும் தனக்கு சிறுவயதிலேயே அறிமுகமான ஒருவர் என்றும் பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் என்றும் கூறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.