நவ.7ஆம் தேதிக்குள் அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு..?

Published:

ayodhya disputed building demolished - 2026

அயோத்தி ராமஜன்ம பூமியில் – சர்ச்சைக்குரிய கட்டடம் அமைந்திருந்த 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்வதற்கான தேதியை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்து, முஸ்லீம் மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முடிக்க விரும்பும் தேதியை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 25 நாட்களாக இருதரப்பு வாத பிரதிவாதங்கள் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. தினமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம்! இந்த வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போகும் நிலையில், தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும் என்று கூறப் படுகிறது. எனவே நவம்பர் மாத முதல் வாரத்துக்குள் இந்த வழக்கில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பப் படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img