December 4, 2021, 3:32 pm
More

  தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு!

  நாளை இம்ரான் இங்கே வந்து போட்டியிட்டு 20 ரூபாய் டோக்கன் தந்தாலும் வாக்களிப்பான்! தன்மானத் தமிழன்!

  8 write down8 - 1

  இது வரை உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் மொத்தம் பத்தே பேர்தான். அதில் 1930 சர்.சி.வி. ராமன் இயற்பியல்!
  1983 சுப்ரமணியன் சந்திர சேகர் இயற்பியல்!
  2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல்!
  மற்ற ஏழு பேரும் இன்ன பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

  மூன்று ஆஸ்கர் விருதுகளில் இரண்டைப் பெற்றவர் திலீப் என்ற AR.ரகுமான் –

  விஞ்ஞாைனத்தில் – பொக்ரான் நாயகன் அப்துல் கலாம் தமிழன்
  சந்திராயன் 1- மயில்சாமி அண்ணாதுரை தமிழன்
  சந்திராயன் 2- சிவன் தமிழன்
  E – Mail – ஐ கண்டுபிடித்த சிவா அய்யாதுரை தமிழன்
  Google – தேடு தளத்தின் CEO சுந்தர் பிச்சை கூடத் தமிழன்

  அவ்வளவு ஏன் பாகிஸ்தானின் கண்களில் விரலை விட்டு ஆட்டி அவர்களது F16_ ஐ வெறும் மிக்கை வைத்துப் பிளந்து தள்ளிய அபிநந்தன் தமிழன்!

  இவற்றையெல்லாம் படிக்கும் பொழுது தமிழன் பாரதத்தின் மிகப் பெரிய அறிவாளி இனம் என்றே தோன்றும்! அதுவும் சத்தியமான உண்மைதான்!

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்த அறிவாளித் தமிழர்கள் தேர்ந்தெடுத்தது யார், யார் என்று பார்த்தால்…

  ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள
  1. கனிமொழி –
  2. ராசா –
  3. கார்த்திக் சிதம்பரம் –
  4. தயாநிதி மாறன் –
  5.தி.மு.க வின் வாரிசு அரசியல்வியாதிகள் –
  அதற்கும் மேலே சாதி அரசியல் செய்து கவுண்டனை வெட்டு கவுண்டச்சியைக் கட்டு என்று கூறிய 
  6.சாதி வெறியன் திருமாவளவன் –
  748 தமிழ மீனவர்கள் மற்றும் இரண்டு லட்சம் ஈழத் தமிழர்கள் சாவுக்குக் காரணமான 
  7.காங்கிரஸ் கட்சிக்கு 9 MP க்கள்!

  ஆனால், 13 வருட முதல்வர் – 5 ஆண்டுகள் பிரதமர் – நேர்மையான மனிதர் மோடிக்கு இவர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களிக்கவில்லை – அப்படியானால் நம் முன் எழும் கேள்வி- தமிழன் உண்மையிலேயே புத்திசாலியா, அடி முட்டாளா என்றால்…

  ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒன்று போல இல்லை! மேற்கண்ட List ல்_ நோபல் பரிசு பெற்ற 3 பேரும் பிராமணர்கள் – AR.ரகுமான் என்ற மதம் மாறியவரைத் தவிர அனைவரும் தேசியத்தை நேசிப்பவர்கள்!

  ஆனால், இங்கே வாழும் சராசரி மக்களுக்கு எந்தக் கொள்கையும் இல்லை! இஸ்லாமியனும், கிறித்தவனும் மோடி எதிர்ப்பை மட்டுமே முன்னிருத்துகிறான்! ஆனால், சராசரி ஹிந்து ஆதாயத்தை மட்டுமே பார்க்கிறான்!

  உதாரணம் RK நகர் இடைத் தேர்தல்! அதில் பணத்திற்காக 53 வருடம் ஆண்ட கட்சிகளையே ஒதுக்கிவிட்டு சுயேச்சைக்கு (TTV) வாக்களித்து வெற்றி பெறச் செய்தான்!

  ஆக – இந்தத் தமிழர்களுக்கு, பகுத்தறிவும், கிடையாது! சுய அறிவும் கிடையாது!பணம் மட்டுமே முக்கியம்!

  நாளை இம்ரான் இங்கே வந்து போட்டியிட்டு 20 ரூபாய் டோக்கன் தந்தாலும் வாக்களிப்பான்! தன்மானத் தமிழன்!

  தமிழன் என்றோர் இனமுண்டு_ தனியே அவர்க்கோர் குணமுண்டு!

  • ந.முத்துராமலிங்கம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,787FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-