
2019-20ஆம் நிதியாண்டில் ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை.
ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
நடப்பு நிகழாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியது.
இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், 2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும் மட்டுமே அச்சிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
உயர் மதிப்பு ரூபாய் தாள்களை திடீரென செல்லாது என அறிவிக்காமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது எனவும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த முறை கடைபிடிக்கப்படுவது வரவேற்புக்குரியதுதான் எனவும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு என்னடா பாடி செய் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய ரூ.2000 தாள்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
இருப்பினும் கடந்த காலங்களில் கள்ள நோட்டுக்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அச்சிட்டப்பட்டு இருப்பதால் இது போன்ற சென்சிடிவ்வான விஷயங்களை RTI சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்



