
நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்
அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசி திருக் கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது.
15/10/2019 செவ்வாய்கிழமை இன்று காலை ஒன்றாம் திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு காலை காந்திமதி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி கொடியேற்றியருளல் வைபவம் நடைபெற்றது



