
முதியவரை குதறித் தின்று குருதி குடித்த பன்றிகள்….! நாகர் கர்னூலில் நடந்த கொடூரம்…!
உடல்நிலை சரியில்லாமல் வேதனையில் இருந்த முதியவரை மகன் அலட்சியமாக விட்டு விட்டதால் பன்றிகள் அவரைக் குதறித் தின்ற கொடூரம் நடந்துள்ளது.
நாகர் கர்னூல் மாவட்டம் நந்திவத்தனம் என்ற கிராமத்தில் இதயத்தை நொறுக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு வீட்டின் முன் இருந்த ஷெட்டில் இருந்து வெளியே வந்து கிராமத்தில் திரிந்து கொண்டிருந்த பன்றிகளின் வாயில் ரத்தம் சொட்டுவதை கவனித்த சிலர் சந்தேகப்பட்டு ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்!
நந்திவத்தனம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான கொண்டய்யா என்பவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அந்த முதியவரின் மகன் அவரிடம் அலட்சியம் காட்டினான். வீட்டின் முன் ஒரு ஷெட் ஒன்றைக் கட்டி அதில் அவரை படுக்க வைத்தான். சரியான மருத்துவ சிகிச்சையோ உணவோ அளிக்கப்படாத நிலையில் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஷெட்டில் படுத்துக் கிடந்த கொண்டய்யாவின் உடல் பாகங்களை பன்றிகள் கடித்துக் குதறிய செய்தி கிராமத்தை பதற்றத்தில் ஆழ்திதியுள்ளது. முதியவரின் தலை மற்றும் கைகளைக் குதறித் தின்று பன்றிகள் ரத்தம் குடித்துள்ளன!
இருப்பினும், இறந்த உடலைத் தான் அவை தின்றுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மகனைத் தேடி வரும் போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



