
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து, ராகுல்காந்தி விடுவிக்கப் படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது ராகுல்காந்தி கூடுதல் கவனத்துடன் பேச அறிவுரை வழங்கி எச்சரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதை அடுத்து, ராகுல்காந்தி மீதான வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். முன்னதாக, ராகுல் சௌகிதார் சோர் ஹை – காவல்காரரே திருடன் என்ற ரீதியில் உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என்று கூறி, ஒரு கருத்தை மேற்கோள் காட்டிப் பேசினார்.
இது நீதிமன்றம் சொல்லாததை சொன்னதாகக் கூறி, தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் பயன்படுத்தினார் என்று பாஜக., எம்பி., மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்திருந்தார்.