
அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்தார் சந்திரபாபு நாயுடு.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு மழையில் நனைத்தார்.
அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஆந்திரா தலைநகர் அமராவதி குறிப்பிடப்படவில்லை என்று எங்கும் விமர்சனம் எழுந்தது.
இந்திய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேசம் இருந்தாலும் தலைநகர் குறிப்பிடப்படாததால் விவாதத்திற்கு உள்ளானது.
இது குறித்து லோக்சபாவில் டிடிபி எம்பி ‘கல்லா’ஜயதேவ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேசுகையில் விரைவில் திருத்தப்பட்ட மேப் வெளியிடுவோம் என்று உறுதியளித்தார்.

கூறியபடியே சனிக்கிழமை இன்று மத்திய அரசு புது மேப் வெளியிட்டது.
சர்வே ஆஃப் இண்டியா வெளியிட்ட இந்த புது மேப்பில் ஏபி தலைநகராக அமராவதியை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆந்திர பிரதேஷ் தலைநகராக அமராவதியை குறிப்பிட்டு விரைவாக புது மேப் வெளியிட்டதற்காக அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். இந்த ஒரு பணியால் அவர் தெலுங்கு மக்களை மிக அருகில் நெருங்கி விட்டதாக பாராட்டு மழை பொழிந்தார்.

அதேபோல் மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.
இந்திய வரைபடத்தில் அமராவதியை சேர்த்து உடனுக்குடன் வெளியிட்டதற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.



