புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோது மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிரமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கானவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பதிவிட்டுள்ளார்.
Tributes to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack last year. They were exceptional individuals who devoted their lives to serving and protecting our nation. India will never forget their martyrdom.
— Narendra Modi (@narendramodi) February 14, 2020