December 8, 2024, 2:28 AM
26.8 C
Chennai

தெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள்! 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

தெலங்காணா முதல்வருக்கு கிரீன் கிப்ட். முதல்வருக்கு பிறந்ததின வாழ்த்துக்கள் தெரிவித்து ஞாயிறன்று ‘மாதாப்பூர் சித்திரமயி ஸ்டேட் ஆர்ட்’ கேலரியில் மிகச் சிறப்பாக முதல்வரின் சித்திரத்தை வரைந்தார்கள்.

முதல்வருக்கு கிரீன் கிப்ட் தருவதற்காக ஹைதராபாத் நகரம் தயாரானது. திங்களன்று முதல்வரின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு, ஹைதராபாத் நகரத்தில் ஒரேநாளில் ஜிஹெஎம்சி தலைமையில் 2.5 லட்சம் செடிகள், ஹெச்எம்டிஏ எல்லையில் இருபதாயிரம் செடிகளை நடுவதற்கு அதிகாரிகள் முன்வந்தார்கள்.

ஜிஹெச்எம்சியில் உள்ள 150 வார்டுகளோடு கூட அவுட்டர் ரிங் ரோடு அருகில் கண்ட்லகோயி ஜங்ஷன், என்பிஏ ஹுடா பார்க், சஞ்சீவய்யா பார்க்குகளிலும் ஆக்ஸிஜனை அதிகமாக அளிக்கும் செடிகளை நடுவதற்கு ஹெச்எம்டிஏ ஏற்பாடு செய்தது.

திங்களன்று காலை 9 மணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார், மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீ நிவாஸ் யாதவ் ஆகியோர் பல்கம்பேட்ட எல்லம்மா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் அங்கே செடிகளை நட்டார்கள்.

பின்னர் நெக்லஸ் ரோட்டில் ஏற்பாடு செய்த ஹெல்த் காம்பினை ஸ்பீக்கர் போச்சாரம் சீனிவாச ரெட்டி ஆரம்பித்து வைத்தார். போட்டோ கண்காட்சியை திட்டத்துறை துணைத்தலைவர் வினோத்குமார், அரசாங்க திட்டங்களின் எல்இடி காட்சிகளை உள்துறை அமைச்சர் மஹமூது அலி தொடங்கிவைத்த பின் எம்பி கேசவ ராவ் கேக் கட் செய்தார்.

ALSO READ:  மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்!

ஜலவிஹாரில் ‘ஒக்குடோலு, குஸ்ஸாடி’ மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள். லலிதகளா தோரணத்தில் கேசிஆர் வடிவத்தில் அமர்ந்து கொண்டு பலூன்களை பறக்க விட்டனர் இரட்டைக் குழந்தைகள்.

2.5 லட்சம் செடிகள்: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நகரமெங்கும் 150 வார்டுகளில் திங்களன்று செடிகளை நடுவதற்கு மேயர் பொந்து ராம்மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதற்கு ஏற்ப 36 நர்சரிகளில் இருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் செடிகளை வரவழைத்து அனைத்து வார்டுகளிலும் வைத்துள்ளார்கள். நகர மேயர் பாபா பஸியொத்தீன் தலைமையில் திங்களன்று காலை 6 மணிக்கு பாத்தபஸ்தியில் உள்ள ஜாமே நிஜாமியாவிலும், ஆறரை மணிக்கு நாம்பல்லியில் உள்ள யூசிபைன் தர்கா சுற்றுப்புறத்திலும், 7 மணிக்கு சையது சாகிப் ரஹமுல்லா தர்காவிலும் செடிகளை நடும் நிகழ்ச்சி நடந்தது.

அரிசி ஆலைகளில் கொண்டாட்டங்கள்: முதல்வரின் தூரப்பார்வையால் மாநிலத்தில் பயிர் வளர்ச்சியும் சாகுபடியும் அதிகமாக வளர்ந்துள்ளதால் அரிசி ஆலைகளுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருப்பதாக தெலங்காணா ரைஸ்மில் அசோசியேஷன் குறிப்பிட்டுள்ளது. அசோசியேஷன் தலைவர் கம்பா நாகேந்தர் கடந்த திங்களன்று இங்கு பேசுகையில் 2014 -15 ல் தெலங்காணாவில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் 24 லட்சம் டன்கள் தானியம் வாங்கினோம். 2018 – 19 இல் 70 லட்சம் டன்கள் வாங்கினோம் என்றார். மின்சாரம் தடையிற்றி இருப்பதால் ஆண்டு முழுவதும் அரிசி ஆலைகள் கலகலப்பாக இயங்குகின்றன. இதற்கு நன்றியாக திங்களன்று கேசிஆர் பர்த்டே கொண்டாட்டங்களை ஒவ்வொரு அரிசி மில்லிலும் சிறப்பாக நிர்வகிக்க போவதாக தீர்மானித்துள்ளதாக கூறினார்.

ALSO READ:  மதுரையில் களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!

வெண்ணெயால் செய்த கேசிஆர் சிற்பம்: எக்ஸெல் காலேஜ் மாணவர்களின் கைவேலை. முதல்வரின் 66-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக எல்பி நகரிலுள்ள எக்ஸெல் கல்லூரி ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தூகுண்ட்ல நரேஷ், எம். நவகாந்த் தலைமையில் மாணவர்கள் வெண்ணெயால் கேசிஆரின் உருவத்தை தயாரித்தார்கள்.

கலினரி ஆர்ட்ஸின் ஒரு பகுதியாக இதனை தயார் செய்தார்கள். எம்எல்சி எக்கெ மல்லேஷம் , பீவரேஜ் கார்ப்பரேஷன் சேர்மன் தேவிபிரசாத், எம் பிஸி கார்ப்பரேஷன் சேர்மன் தாடூரி ஶ்ரீனிவாஸ், டிஆர்எஸ் மாநில காரியதர்சி கட்டு ராமசந்திரராவு இந்த வெண்ணை சிலையைத் திறந்து வைத்தார்கள்.

எம்பி சந்தோஷ்குமார் அழைப்பின் பேரில் மாணவர்கள் செடிகளை நட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் டிஆர்எஸ் சோஷல் மீடியா கோஆர்டினேட்டர் பங்கு கொண்டார்.

60 கிலோ அரிசியால் கேசிஆர் உருவம்: கேசிஆர் பிறந்தநாள் தொடர்பாக கஜ்வேல் நகரை சேர்ந்த ராமகோடி பக்த சமாஜம் நிறுவனர் ராமராஜ் 66 கிலோ அரிசியால் கேசிஆர் உருவத்தை தயாரித்தார். பிரகதி சென்ட்ரல் ஸ்கூல் மைதானத்தில் ஐந்து நாட்களாக உழைத்து 66 கிலோ அரிசியால் 16 அடி உள்ள மிகப்பெரிய சித்திரத்தை அழகாக வரைந்துள்ளார். சென்ற ஆண்டு கேசிஆர் பிறந்த நாளன்று நெல்லால் அவருடைய உருவத்தை வரைந்ததாகவும் இந்தமுறை அரிசியால் கேசிஆரின் உருவத்தை வரைந்து உள்ளதாகவும் ராமராஜ் கூறினார்.

ALSO READ:  திருக்கோவில் விழாக்களை திட்டமிட்டு தடுத்து சிதைக்க முனைகிறது தமிழக அரசு!
author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week