டிரம்புக்கு… போச்சம்பள்ளி பட்டு சால்வையை பரிசளித்த ‘முதல்வர்’!

Published:

trump kcr - 2026

டொனால்ட் ட்ரம்ப்க்கு போச்சம்பல்லி பட்டு சால்வையை பரிசளித்தார் தெலங்காணா முதல்வர் கேசிஆர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் தெலங்காணா முதலமைச்சர் சந்திரசேகர ராவு கைகுலுக்கினார். அப்போது அவரோடு உரையாடினார்.

ஜனாதிபதி மாளிகையில் ட்ரம்ப் வருகையை கௌரவிக்கும் விதமாக ஏற்பாடு செய்த விருந்தில் கேசிஆர் பங்கு கொண்டார் ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர் பங்கு கொண்டார்.

விருந்துக்கு விருந்தினர்களாக வந்த பல மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோவிந்த் டிரம்புக்கு அறிமுகம் செய்வித்தார். அப்போது தெலங்காணா முதல்வர் கே சி ஆர் ரோடு மற்றவர்களையும் டிரப்ப் தம்பதிகள் கைகுலுக்கினார். அப்போது கேசிஆர் டிரம்போடு உரையாடினார்.

டிரம்பை முன்னிட்டு ஏற்பாடு செய்த இந்த விருந்தில் சைவ, அசைவ உணவு வகைகள் இடம்பெற்றன. அசைவ உணவை விரும்பி உண்ணும் டிரம்புக்காக பிரத்தியேகமாக அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவற்றில் தெலங்காணா தொடர்பான உணவு வகைகளும் இருந்தன.

ஜனாதிபதி பவனில் உள்ள புத்தர் சிலையருகில் டிரம்ப் தம்பதிகளோடு ராமநாத் கோவிந்த் தம்பதிகள் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அதன்பின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி யோடு டிரப்ப் உரையாடினார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
trump kcr1 - 2026

பிரதமர் மோடி விருந்தினர்களை அறிமுகம் செய்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் தெலங்காணா முதல்வர் கே சி ஆர் ரோடு கூட பல மாநில முதல்வர்களும் தொழிலதிபர்களும் உயரதிகாரிகளும் பங்கு கொண்டார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள சிறப்புகளை பற்றி டிரம்ப் தம்பதிகளுக்கு ராம்நாத் கோவிந்த் விவரித்தார். ராம்பூர்வ புல் சிலையின் வரலாற்றுப் பின்னணியை டிரம்ப் தம்பதிகளுக்கு கோவிந்த விவரித்துக் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மெலானிமா டிரம்புக்கு மட்டுமின்றி அவர்களின் மகள் இவாங்காவுக்கும் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர் காணிக்கைகள் கொடுத்தார். டிரம்புக்கு போச்சம்பல்லி பட்டு சால்வையும் சார்மினார் மெமன்டோ வும் பரிசளித்தார். மிலானியாவுக்கும், இவாங்காவுக்கும் போச்சம்பள்ளி மற்றும் கத்வால் பட்டுப்புடவைகளைப் பரிசளித்தார் தெலங்காணா முதல்வர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img