
தில்லியில் பைரியா பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மகளை கடந்த 2014ஆம் ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
சில நாட்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்தனர் அந்த ஜோடிகள். அதன்ப பின்னர் கடந்த மூன்றாண்டுகளாக வரதட்சணை கேட்டு நச்சரித்தார். அதுவும் ஒரு புல்லட் வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தார்.
அந்த நேரத்தில் அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றதால் புல்லட் கதையை அவரது கணவர் சில காலம் விட்டுவிட்டார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் கேட்ட புல்லட் கிடைக்காததால் அந்த நபர் தனது மனைவியை தண்டிக்க முடிவு செய்தார். அதற்காக அந்த நபர் தனது நண்பர்கள் 4 பேரை வீட்டில் அடைத்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார்.
மேலும் அதை இவரே வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு, புல்லட் வாங்கி வராவிட்டால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி கொலையும் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்து பின்னர் அப்பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



