
தேர்தல் தேதியை முடிவு செய்ய லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் தரப்பில் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர்.
5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5ம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யக் கூறியதாக புகார் கூறியுள்ளனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



