
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரட்டும், பாஜக.,வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டியுள்ளார். முன்னர் பாஜக-வுடன் கூட்டணி குறித்து டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்ட பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து மீண்டும் ஒரு புதிய டுவீட்டை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜக-வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டார். முன்னதாக, நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டிவிட்டரில் வெளியான இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
We mean that only after the announcement of Local body elections we will think about the Alliance with any political party. https://t.co/G1ZeoV3UBT
— O Panneerselvam (@OfficeOfOPS) May 20, 2017
இதனிடையே அவர் பதிவு செய்த இரு டிவிட்கள் அந்தப் பதிவில் இருந்துஎடுக்கப் பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் வா. மைத்ரேயன் எம்பி “ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில் பதிவான கருத்துக்கு உடனடியாக மறுப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விவரம் தெரியாதவர்கள் அப்படியொரு பதிவைப் போட்டுள்ளனர்” என்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ ட்விட் பக்கத்தில், கூட்டணிகுறித்த பதிவுகள் காலை 11.40 மணியளவில் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த ட்விட்டைப் பதிவுசெய்த ஐடி விங்க்கில் உள்ளவர்களுக்கு, அணி தலைமை கடும் எச்சரிக்கை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.



