கொடூரம்… கொரோனா அச்சம். கோழிகள் உயிரோடு சமாதி. காரணம்? கொரோனா மனிதனை எவ்விதம் பயப்படுத்துகிறது என்பதற்கு வார்த்தைகளே இல்லை. கரோனாவால் மனிதன் பலவிதங்களில் தொல்லைக்கு ஆளாகிறான்.
இதுவரை கரோனாவால் உலகம் முழுவதிலும் 4300 பேர் இறந்துவிட்டனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இரண்டு மாதங்கள் முன் சைனாவில் மட்டுமே அதிகமாக இருந்த கரோனா நோய் தாக்குதல் சிறிது சிறிதாக பிற நாடுகளுக்கும் பரவியது.
இப்படி இருக்க, சிக்கன் மூலம் கரோனா பரவுகிறது என்ற வதந்திகளால் மக்களில் பெரும் பயம் பீடித்தது. அதனால் சிக்கன் விலைகள் ஒரேடியாக விழுந்துவிட்டன. நிறைய இடங்களில் சிக்கன் கிலோ 5 ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்கிறது. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள்.
இனிமேல் பண்ணைகளில் கோழிகளை வைத்து வளர்ப்பது அதிக நஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நினைத்த கர்நாடக கோழிப்பண்ணை வியாபாரி சுமார் 6 ஆயிரம் கோழிகளை உயிரோடு இருக்கும்போதே டிரக்கில் ஏற்றி எடுத்து வந்து குழிதோண்டி சமாதி செய்தார்.
இந்த நிகழ்ச்சியை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார். தான் படும்பாட்டை விவரிக்கிறார். நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்து வியாபாரி மீது கோபம் கொள்கிறார்கள். பாவம்.. கோழிகளை இவ்வாறு உயிரோடு புதைப்பதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நசீர் அகமது மக்கந்தர் என்பவர் கோடக் தாலுகாவில் நுல்சூர் என்ற இடத்தில் வசிக்கிறார். பெல்காவி என்ற இடத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளார்.
ஒரு கிலோ கோழி இதுவரை 50 ரூபாய் 70 ரூபாய் வரை விற்றிருக்கையில் இந்த கரோனா வைரஸ் அச்சத்தினால் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கும் ஒரு கிலோ விற்க வேண்டி வருகிறது என்றும் இந்த நிலையில் கோழிகளை வைத்து வளர்ப்பதால் 6 லட்சம் ரூபாய் நட்டத்திற்கு ஆளானதாகவும் அதற்கு உணவுக்கும் மருந்துக்கும் செலவிட முடியவில்லை என்றும் வருந்துகிறார்.
2 கிலோ உள்ள உயிர்க் கோழியே 25 ரூபாய்தான் அவருக்கு பெற்றுத் தருகிறது என்றும் கூறி இனி மேற்கொண்டு கோழிகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று கூறி அவற்றை உயிரோடு புதைக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியீட்டு கதறுகிறார் . அதைப் பாருங்கள். மனதை வருத்தி உருக்கும் செயலாகவே விளங்குகிறது.
தற்போது சிக்கனும் மட்டனும் சாப்பிட்டவர்கள் வெஜிடேரியன் ஆக மாறி வருகின்றனர். எல்லாம் கொரோனா அச்சம்தான் காரணம்!