
புது தில்லி:
பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று வர்ணித்துள்ளார், பாகிஸ்தானில் இருந்து நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி இந்தியா மீண்ட பெண் உஸ்மா.
பாகிஸ்தானுக்குச் செல்வது சுலபம், ஆனால் அங்கிருந்து திரும்புவது மிகக் கடினம். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு. பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமானாலும், திருமணத்துக்குப் பின்னர் அங்குச் செல்பவர்கள் அழுதுகொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார் உஸ்மா.
இதனிடையே உஸ்மா இங்கு நம்மிடையே இருப்பதற்குக் காரணம், பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுடனான ஒத்துழைப்புதான். இந்தப் பெண்ணுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஷானவாஸ் நூனைப் பாராட்டுகிறேன். அவர் தனது மகளைப் போல் நினைத்து இந்தப் பெண்ணுக்காக வாதாடினார் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
முன்னதாக இன்று காலை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது, இந்திய மண்ணை விழுந்து தொட்டு கும்பிட்டு உள்ளே வந்தார் உஸ்மா. இவர் அண்மையில் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஒருவர் தன்னை திருமணம் செய்ய முயன்றதாகக் கூறி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தின் சார்பில், சட்டப் போராட்டம் நடத்தி அவர் இன்று இந்தியா திரும்பினார்.
Uzma is here also bcoz of cooperations of Pak’s foreign&home ministries,I thank lawyer Shahnawaz Noon who fought her case like a father: EAM pic.twitter.com/yqx31tOsXe
— ANI (@ANI_news) May 25, 2017
It’s easy to go to Pak, but tough to return. Pakistan is a ‘well of death’. Even those who go there after arrange marriage are crying: Uzma pic.twitter.com/v0EOBuVYWV
— ANI (@ANI_news) May 25, 2017
Delhi: EAM Sushma Swaraj meets family of Uzma, who said she was forced to marry a Pakistani man at gunpoint. She returned to India today. pic.twitter.com/zWPVBG5jC1
— ANI (@ANI_news) May 25, 2017
முன்னதாக வந்த செய்தி …



