18 வயது சிறுமியை காட்டுக்குள் தூக்கி சென்று கிட்டத்தட்ட 4 மணி நேரம் 7 பேர் அடங்கிய கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. ஊரடங்கிலும் அடங்காத இந்த பலாத்கார சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்து அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த கும்பலில் பாதி பேர் 18 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் என்பதுதான் அடுத்த ஷாக்!
வன்முறை தாண்டவங்கள் வடமாநிலங்களில் பெருகியபடியே உள்ளன. தற்போது ஊரடங்கு என்பதால் எப்படியும் இந்த கோர நிகழ்வுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காம பிண்டங்கள் அடங்கவே இல்லை.
மத்திய பிரதேசம் பெடூர் மாவட்டத்தில் மீண்டும் நடந்துள்ளது… சம்பவத்தன்று இரவு 8 மணி இருக்கும். அண்ணன் – தங்கை இருவரும் டூவீலரை எடுத்து கொண்டு பெட்ரோல் பங்க் சென்றார்கள். அண்ணனுக்கு 21 வயது.. தங்கைக்கு 18 வயது.. இருவரும் டூவீலரில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பாதர் நகரிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, 7 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இவர்களை துரத்தியது. அதனால் பைக்கை வேகமாக ஓட்டி கொண்டு அண்ணன் வந்துள்ளார்.. ஆனாலும் 7 பேரும் துரத்தி மடக்கி சுற்றி வளைத்து கொண்டது. அண்ணனை சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச்சென்று அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டது.. தங்கையை பக்கத்தில் இருந்து காட்டிற்குள் தூக்கி சென்று மாறி மாறி சீரழித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கொட்வாலி போலீஸ் அதிகாரி சொல்லும்போது, “ஊரடங்கு என்பதால் ரோட்டில் யாருமே இல்லை. இதுதான் 7 பேருக்கும் சாதமாகிவிட்டது. அண்ணன் – தங்கை இருவரும் கத்தி கூச்சலிட்டும் யாருமே உதவிக்கு வரவில்லை. அந்த பெண்ணை காட்டுக்குள் வைத்து கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நாசம் செய்துள்ளனர்.
இதற்கு நடுவில் கிணற்றில் தள்ளிவிடப்பட்ட அண்ணன் நடுராத்திரி 1 மணி அளவில் கஷ்டப்பட்டு எப்படியோ மேலே ஏறி வந்திருக்கிறார். அருகில் இருந்த ஊர்க்காரர்களிடம் நடந்ததை சொல்லி தங்கையை காப்பாற்றும்படி உதவி கேட்கவும், இதை கேட்டு பதறிய ஊர்க்காரர்களும் திரண்டு வந்து தங்கையை தேடியிருக்கிறார்கள். அப்போதுதான் 7 பேரில் ஒருவன், பெண்ணை காட்டில் இருந்து பைக்கில் ஏற்றி கொண்டு வந்து ரோட்டில் இறக்கி விட வந்துள்ளான். இதை கண்ட கிராம மக்கள் ஆவேசம் அடைந்த அந்த இளைஞனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மற்றவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கவும், சக நண்பர்களை பற்றி தகவல்களை சொல்லிவிட்டு, அந்த இளைஞன் இருட்டிற்குள் தப்பி ஓடிவிட்டான். இளைஞன் சொன்ன தகவலை வைத்து, அனைவரும் சேர்ந்து புகார் தந்தனர். அதனடிப்படையில் 5 பேரை கைது செய்துவிட்டோம். மீதமுள்ள 2 பேரை தேடி வருகிறோம். ஆனால் கைதான 5 பேரில் 3 பேர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள்.. விரைவில் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்