எம்எல்ஏ முன்னிலையில் கடப்பா மாவட்டம் அதிகார ஒய்சிபியில் இருதரப்பினர் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பின் தலைவர்களும் நடுரோட்டில் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த மாவட்டம் கடப்பா. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பார்டியில் வர்க்க பேதங்கள் பற்றி எரிகின்றன. ஒய்சிபி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் அடிதடி சண்டையில் இறங்கினார்கள். கடப்பா மாவட்டம் பத்வேலு தொகுதியில் நீயா நானா என்ற அதிகாரப் போர் கைகலப்பாக மாறியது.
‘பி கோடூரு ‘ மண்டலம் பாயலகுண்ட்ட கிராமத்தில் புதன்கிழமை சசிவாலயம் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். பத்வேலு எம்எல்ஏ வெங்கட சுப்பையா கிராம சசிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். ஒரு பிரிவினர் இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு முயற்சிக்கையில் இந்த சண்டை நடந்தது. ராமகிருஷ்ணா ரெட்டி, டி யோகானந்த ரெட்டி தரப்பினர் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசி எறிந்து சண்டையில் ஈடுபட்டார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தரப்பினரை வேண்டும் என்றே அழைக்காமல் விடுத்ததால் இந்த தகராறு நேர்ந்தது. இது சற்று நேரத்தில் ஒய்சிபி தலைவர் களிடையே சண்டையாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.
தலைவர்கள் கூட நடுரோட்டில் கட்டிப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டார்கள். லாக்டௌன் நேரத்தில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து எழுந்து நூற்றுக் கணக்கானோர் சூழ்ந்திருந்த சண்டையிட்டார்கள். அந்த சண்டையில் எட்டு பேர் காயமடைந்தார்கள்.
அதற்குள் அங்கு வந்து சேர்ந்த போலீசார் இருதரப்பினரையும் விரட்டி விட்டார்கள். சொன்னதை கேட்காமல் போனவர்கள் மீது லாட்டியால் அடித்தார்கள். காயமடைந்த 8 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்தார்கள்.
பத்வேலு எம்எல்ஏ வெங்கட்ட சுப்பையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே இருதரப்பினரும் இவ்வாறு அடித்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.