
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தும் முகாமில் ஒரே தடவையில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று தெளிவாகியது. நெல்லூர் மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள ஆத்மாகூரு குவாரண்டைன் சென்டரில் 15 பேருக்கு கரோனா பாசிட்டிவாக பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆத்மாகூரு டிவிஷன் எல்லையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்களை நகரத்திலுள்ள குவாரண்டின் சென்டரில் இருத்தினார்கள். இவர்களுக்கு கொரோனா நோய் பரிசோதனைகள் நடத்தியபோது 15 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதனால் உடனடியாக அவர்களை நெல்லூர் ஜசொலேஷன் வார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநில அளவில் 15,633 சாம்பிள்களை பரிசோதித்ததில் 253 பேருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று மீடியா புல்லட்டில் மருத்துவ சுகாதார துறை தெரிவித்தது.
பிற மாநிலங்களிவிருந்து வந்தவர்கள் 33 பேர், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் இரண்டு பேர் இவர்களோடு சேர்த்து மொத்தம் 294 கேசுகள் பதிவாகியுள்ளன. புதிதாக வந்த கேசுகளைச் சேர்த்தால் மாநிலத்திற்கு தொடர்புடையவர்களின் கேசுகளின் எண்ணிக்கை 4841ஐ அடைந்தது.
அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 204 பேருக்கும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் ஆயிரத்து 107 பேருக்கும் கரோனா பாசிட்டிவ் என்று தெளிவாகியுள்ளது.
மொத்தத்தில் மாநில அளவில் பார்த்தால் 6152 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது.
ஞாயிறு அன்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா வைரஸ் நோய் நீங்கி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதோடு மாநில அளவில் 2723 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்கள். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேசுகள் 2034 ஆக உள்ளது.
அதேபோல் ஞாயிறன்று மேலும் இருவர் வைரசால் மரணம் அடைந்துள்ளனர். கர்னூல் மாவட்டத்தில் ஒருவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார்கள். இதனால் மாநில அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.