கொரோனாவால் மக்கள் அதிருப்தியை திசை திருப்ப ஊர் பெயர்களை மாற்றியுள்ளது அரசு: தங்கம் தென்னரசு!

Published:

thangam thennarasu
thangam thennarasu

திருச்சுழி : கொரோனாவால் மக்கள் மனநிலையில் ஏற்பட்ட அதிருப்தியை சரி கட்டுவதற்காக ஊர் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் 

ஊர்ப்பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றிய விவகாரத்தில், அறிவிக்கை வெளியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கின்றது என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தற்போது திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு கூறியுள்ளார் 

கொரொனா தொற்று குறித்த மக்களின் எதிர்மன நிலையைத் திசை திருப்பும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு அமைந்திருக் கின்றது; தவிர, குழப்பங்களும், பிழைகளும் மலிந்ததாக இருக்கின்றது. இன்றைய சூழலில் இவ்வளவு அவசரமாக இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தங்கம் தென்னரசு 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசாணை/ அறிவிக்கையைத் தமிழ் வளர்ச்சித்துறை இணைய தளப் பக்கத்தில் ஏன் இன்னும் வெளியிடவில்லை.. இன்று கேட்டுள்ள தங்கம் தென்னரசு  இத்தகைய குற்றச்சாட்டுகள் தமிழக அரசின் மீது பரவலாக வைக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்  பாண்டியராஜன் அவர்களோ துறை அதிகாரிகளோ இதுவரை ஏன் முழுமையான விளக்கத்தைத் துறை மூலம் அளிக்கவில்லை?. இன்று கேட்டுள்ளார் 

மேலும்தமிழ் வளர்ச்சித் துறை மெளனம் கலைத்து உரிய விளக்கத்தை அளிக்க முன்வருமா? அல்லது இப்படி ஒன்று வெளிவந்ததே தங்களுக்குத் தெரியாது என கையை விரித்துவிடப் போகின்றதா?.என்று  அவர் கேள்வி எழுப்பிஉள்ளார்.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img