sapthagiri issue
sapthagiri issue

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்கும் பிற மதப் பிரச்சாரம் குறித்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மாத பத்திரிக்கை சப்தகிரிக்கு சந்தா கட்டினால் அதோடுகூட சஜீவ சுவார்த்தை என்ற மாதப் பத்திரிகையை திதிதே போஸ்ட் மூலம் அனுப்புகிறது. இந்த சம்பவம் குண்டூரில் நடந்துள்ளது.

திதிதே.,வின் சப்தகிரி பத்திரிக்கையோடு கூட பிறமத பத்திரிகையை அனுப்புவது குறித்து பலரும் வேதனை தெரிவித்துள்ளார்கள். திருமலையின் புனிதத்தை கெடுக்கும் படியாக இந்த விவகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

திதிதேவுக்கு இந்து மத நன்கொடையாளர்கள் அளிக்கும் டொனேஷன்கள் பிற மத பிரச்சாரத்திற்காக பயன்படுகிறதா என்ற சந்தேகம் வெளிப்பட்டுள்ளது. குண்டூரில் உள்ளவருக்கு சப்தகிரி என்ற மாதப் பத்திரிகை மாதாமாதம் வந்து கொண்டிருக்கும்போது அதோடுகூட சஜீவ சுவார்த்த என்ற இன்னொரு தெலுங்கு பத்திரிக்கையும் உடன் வந்ததால் இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருமலா திருப்பதி ஊழியர்கள் இவ்விதம் மற்றுமொரு அபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரமான தவறு நடந்துள்ளது குண்டூரு நகரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சப்தகிரி மாதப் பத்திரிகையோடு வந்த பிற மத பத்திரிகையைப் பார்த்தால் டிடிடியின் உள்வேலையின் உண்மைத்தன்மை புரிகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

ஒரு ஆண்டு சந்தா கட்டிய பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் சப்தகிரி மாதப் பத்திரிகையை அனுப்புவது வழக்கம். ஆனால் குண்டூர் நகரத்தில் உள்ள மல்லிகார்ஜுன ராவு என்ற பக்தருக்கு இந்த மாதம் சப்தகிரி மாத பத்திரிகை வந்தது. பார்சலைத் திறந்து பார்த்தால் சப்தகிரி மாத இதழோடுகூட பிற மதத் தொடர்பான சஜீவ சுவார்த்த என்ற மற்றுமொரு மாத பத்திரிக்கையும் பார்சலில் வந்தது.

எப்போதும் இல்லாத விதமாக டிடிடி புதிதாக பிற மதப் பிரசாரம் செய்வது குறித்து வேதனை அடைந்துள்ளனர் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending