
பெங்களூர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இஸ்ரோவின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85.
1984 முதல் 1994 வரை இஸ்ரோவின் தலைவராக ராமச்சந்திர ராவ் இருந்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ’ஆர்யபட்டா’ ஏவப்பட முக்கியப் பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய புகழுக்குக் காரணமாக அமைந்த சந்த்ராயன் 1, மங்கள்யான் ஆகிய செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்துக்கு பின்னணியில் அமைந்த கோள்களுக்கு இடையிலான செயற்கைக்கோள் ஏவுதலின் அடிப்படையை அன்றே விதைத்தவர். சூரியனை நோக்கிய பயணத்தில் பூமிக்கு அடுத்து உள்ள சுக்கிரனுக்கு இந்தியா வரும் காலத்தில் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்றவர்.



