December 6, 2025, 11:58 AM
26.8 C
Chennai

போதை கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஏர்வாடியில் கைது!

pakistani-arrested-in-yervadi

ராமநாதபுரம்:

போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட தர்கா ஒன்று உள்ளது. இங்குள்ள தனியார் விடுதியில் சந்கேத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கே சென்று விசாரித்தனர்.

அப்போது, அந்த முதியவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை உல்பெண்டால் பகுதியில் இருந்து தாம் வருவதாகவும், தனது பெயர் காசிம்பாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் முதியவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, இந்திய ரூபாய் 3 ஆயிரம், பாகிஸ்தான் ரூபாய் 2500 உள்பட இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவர் மும்பை, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்த ஆதாரங்களும் சிக்கின.

மேலும் பீகார் மற்றும் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஆதார் கார்டு நகலில் தனது புகைப்படத்தை ஒட்டி, அதைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த முதியவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் வரவழைக்கப் பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியைச் சேர்ந்த அலி முகம்மது மகன் முகம்மது யூனுஸ் (வயது 67) என்பது தெரியவந்தது.

அந்த நபர் போதைப் பொருட்கள் கடத்துவதற்காக இந்தியா வந்ததாகவும், அதன்படி கடந்த ஏப்ரல் இலங்கைக்குச் சென்ற அவர் அங்கே போதைப் பொருள் கடத்தல்காரர்களைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியபடி அங்கிருந்து கள்ளத் தோணி மூலம் தமிழகத்துக்கு வந்தவர், பின்னர் அகமதாபாத்தில் குறிப்பிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நபரைச் சந்தித்துள்ளார்.

மேலும் போதைப் பொருள் விநியோகம் தொடர்பாக, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் வேறு சில இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அதன் பின், ஏர்வாடியில் இருந்த இருவர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் ஏர்வாடிக்கு வந்ததாகத் தெரிய வந்தது. அவரிடம் தேசிய பாதுகாப்பைக் கையாளும் மாவட்ட க்யு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல விவரங்கள் தெரியவந்தன.

முகம்மது யூனுஸ் கள்ளத் தோணி மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டு அதற்காக ஏர்வாடியில் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கடற்காற்று அதிகமாக இருந்ததால் இலங்கைக்கு செல்ல முடியவில்லை என்றும் கடல் இயல்பான நிலைக்கு வந்த பிறகு இலங்கை செல்ல முகம்மது யூனுஸ் திட்டமிட்டதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகம்மது யூனுசிடம் போதை பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அதன் பின், அவரை சட்ட விரோதமாக போதைப் பொருள் விநியோகிப்பதாகக் கூறி அழைத்து வந்த ஏர்வாடியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த யூனுஸ், பின்னர் பரமக்குடியில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டது. அதன்பின், சென்னை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டினரை அடைத்து வைக்கும் சிறப்பு செல்லில் அடைக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி, இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மண்டபத்தைத் திறந்து வைக்க ராமேஸ்வரம் வர உள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் கைதாகி இருப்பது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories